• December 22, 2025
இறைவனைத் தொழ வந்த இடத்தில்…. இறைவனிடமே சென்ற உயிர்…. மசூதியில் நிகழ்ந்த சோகம்….!!

மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வா மாவட்டத்தில் உள்ள ஒரு மசூதியில், தொழுகைக்காகக் காத்திருந்த 56 வயது நபர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜமா மசூதி கமிட்டி உறுப்பினரான ஹாஜி ஷேக் அலிம் என்பவர், இரவு தொழுகைக்காக…

Read more

  • December 22, 2025
அதிர்ச்சி! நெபுலைசரில் SPRITE ஊற்ற முயன்ற ஊழியர்…. குழந்தை உயிரோடு விளையாட்டு…. மருத்துவமனையில் நடந்த பகீர் சம்பவம்….!!

மீரட்டில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில், குடிபோதையில் இருந்த வார்டு பாய் ஒருவர், நான்கு வயது சிறுவனின் நெபுலைசரில் (ஆவி பிடிக்கும் கருவி) தவறுதலாக ஸ்பிரிட்டை நிரப்ப முயன்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. நல்லவேளையாக, அங்கிருந்த மற்ற ஊழியர்கள் இதனைச் சரியான…

Read more

  • December 22, 2025
“அப்பா போயிட்டு வர்றேன்மா…” மகளிடம் விடைபெற்ற சில நொடிகளில் பிரிந்த உயிர்…. ஒரு தந்தையின் கடைசிப் பாசம்….!!

உத்தரப்பிரதேசத்தில் மகளைப் பள்ளியில் விட்டுவிட்டுத் திரும்பிய தந்தை, மாரடைப்பால் பள்ளி வாசலிலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 40 வயதான தாரிக் மேவதி என்பவர், தனது மூன்று வயது மகளைப் பள்ளியின் உள்ளே பத்திரமாக அனுப்பிவிட்டுத் திரும்ப முற்பட்டபோது, திடீரென…

Read more

  • December 22, 2025
அதிர்ச்சி தரும் விமர்சனம்…. ‘உதவாக்கரை ராஜாக்களால் திமுகவை ஒன்றும் செய்ய முடியாது’…. சீறிய அமைச்சர் சேகர்பாபு….!!

வடசென்னை வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் சேகர்பாபு, சென்னை தீவுத்திடல் மற்றும் ஸ்டான்லி மருத்துவமனை சாலைப் பகுதிகளில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஹெச்.ராஜாவை…

Read more

  • December 22, 2025
கண்கலங்கிய இந்திய இளம் வீரர்கள்: கோப்பையை வென்ற பாகிஸ்தான் வீரர்களின் ஆக்ரோஷமான கொண்டாட்டம்….!!”

சமீபத்தில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில், இந்திய அணி பாகிஸ்தானிடம் 191 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து கோப்பையை நழுவவிட்டது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 348 ரன்கள் என்ற கடினமான இலக்கை நிர்ணயித்த நிலையில், இந்திய…

Read more

  • December 22, 2025
குவாட்டர், பிரியாணிக்கு நாங்க வரல…. 80 வயது மூதாட்டி சொன்ன மூன்றெழுத்து மேஜிக்…. வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ….!!

ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற மூதாட்டி ஒருவர், விஜய்யின் மீதான தனது அபார நம்பிக்கையை மிகவும் எதார்த்தமாகப் பகிர்ந்து கொண்டார். அவர் பேசுகையில், “எம்.ஜி.ஆர் என்பது மூன்றெழுத்து, விஜய் என்பதும் மூன்றெழுத்து… இந்த மூன்றெழுத்துக்கு 2026-ல் வெற்றி உண்டு! நாங்க காசுக்காகவோ…

Read more

ஷாக்கிங் நியூஸ்! ₹14 தண்ணீர் பாட்டிலை ₹30-க்கு வாங்குகிறீர்களா….? ரயில்வேயால் விதிக்கப்பட்ட அதிரடி அபராதம்….!!

ரயில் பயணத்தின்போது தாகம் தீர்க்கும் ‘ரயில் நீர்’ (Rail Neer) பாட்டில்களின் விலை தற்போது குறைக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 2025-இல் நடைமுறைக்கு வந்த ஜிஎஸ்டி (GST) வரிக்குறைப்பைத் தொடர்ந்து, ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலின் விலை 14 ரூபாயாகவும், 500 மிலி…

Read more

என்னம்மா இப்படிப் பேசுறீங்க….? போலீசை பார்த்து ‘அந்த’ வார்த்தை சொல்லலாமா….? வைரலாகும் வீடியோ….!!

சமூக வலைத்தளமான எக்ஸ் (X) தளத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில், ஸ்கூட்டரில் வந்த ஒரு பெண்ணைப் போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்ய முயல்கின்றனர். அப்போது அந்தப் பெண்ணுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில்…

Read more

​”ரூல்ஸ்-னா இதுதான் ரூல்ஸ்…. மேயருக்காகக் கூட நிக்காத டிரைவர்…. இந்தியாவா இருந்தா என்ன நடந்திருக்கும் தெரியுமா…? வைரலாகும் ஆச்சரிய வீடியோ….!!

மெக்சிகோவில் புதிய ரயில் பாதை தொடக்க விழாவின் போது, அந்நாட்டின் மேயர் தற்செயலாக தாமதமாக வந்துள்ளார். அவர் வருவதற்கு முன்னரே ரயில் கிளம்பிவிட்டதால், அதை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என்ற ஆதங்கத்தில் அவர் ரயில் நிலைய மேடையில் ஓடி வரும் காட்சிகள்…

Read more

‘ஹிஜாப்’ விவகாரம்…. அன்று மாஷா அமினி…. இன்று இந்த இரு பெண்கள்…. வைரலாகும் பகீர் வீடியோ….!!

ஈரானில் ‘சரியான முறையில் ஹிஜாப் அணியவில்லை’ எனக் கூறி மாஷா அமினி கொல்லப்பட்ட சம்பவம் உலகையே உலுக்கியது. தற்போது ஈரான் முதல் வங்காளதேசம் வரை பல நாடுகளில், பெண்கள் கட்டாயங்களுக்குப் பணியாதபோது அவர்கள் மீது அநாகரிகமான தாக்குதல்கள் நடத்தப்படுவதை இந்தச் சமீபத்திய…

Read more

புல்லட் ஓட்டுனவருக்கு இருந்த பொறுப்பு…. குழந்தை மீது மோதிய ஸ்கூட்டர் நபர்…. வைரல் வீடியோவால் டென்ஷனான நெட்டிசன்கள்….!!

சமூக வலைத்தளமான எக்ஸ் (X) தளத்தில் பகிரப்பட்டுள்ள ஒரு சிசிடிவி காட்சி காண்போரை நிலைகுலைய வைத்துள்ளது. அந்த வீடியோவில், ஒரு தெருவில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்த ராயல் என்பீல்ட் வாகன ஓட்டி, மிகவும் பொறுமையாகவும் கவனமாகவும் அந்த இடத்தைக் கடந்து…

Read more

என்ன மனுஷன்யா இவன்….? ஒரு பொண்ணு நிக்கிறப்போ இப்படியா பண்றது….? பெண் சிசு கொலைதான் இதுக்கு காரணமா….?

சீனாவில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சி சமூக வலைத்தளமான எக்ஸ்-இல் வைரலாகி வருகிறது. அதில், ஒரு பெண் நின்று கொண்டிருக்கும்போது, அவருக்குத் தெரியாமல் ஒரு நபர் பின்னால் வந்து அவரது ஆடைக்குள் அநாகரிகமான முறையில் பார்க்க முயற்சிக்கும்…

Read more

திமுக விழாவில் கூட்ட நெரிசல்…. ​கரூரைப் பத்தி பேசினவங்க எங்கே….? ராணிப்பேட்டை நெரிசலுக்கு என்ன பதில்….?

கரூரில் நடந்த கூட்ட நெரிசல் விவகாரத்தை திமுகவினர் மிகக் கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், தற்போது அதே போன்றதொரு சம்பவம் திமுக நிகழ்ச்சியிலேயே நடந்திருப்பது பெரும் பேசுபொருளாகியுள்ளது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு, ராணிப்பேட்டையில் அமைச்சர் காந்தி தலைமையில் நலத்திட்ட…

Read more

“டிக்கெட்டுக்காக உயிரை விட்டுருவாங்க போல” டாய் டிரெய்னில் இருந்து குதித்த சுற்றுலாப் பயணிகள்…. வைராகம் பகீர் வீடியோ….!!

இமாச்சலப் பிரதேசத்தின் கால்காவிலிருந்து சிம்லா செல்லும் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘டாய் டிரெய்ன்’ ரயிலில், சில சுற்றுலாப் பயணிகள் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்துள்ளனர். சிம்லா ரயில் நிலையத்தில் இறங்கினால் டிக்கெட்டைப் பரிசோதகரிடம் காட்ட வேண்டும், இல்லையெனில் அபராதம் கட்டி அவமானப்பட நேரிடும்…

Read more

“ஓசி பயணம்” 400 பேரில் 100 பேரிடம் மட்டுமே டிக்கெட்​…. முழக்கமிட்டு அபராதத்திலிருந்து எஸ்கேப்….!!

மதுரையிலிருந்து ராமேஸ்வரம் நோக்கிச் சென்ற ரயிலில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 400 பக்தர்கள் பயணித்துள்ளனர். இவர்கள் ரயிலின் இருக்கைகளை கும்பலாக ஆக்கிரமித்து அமர்ந்திருந்ததால், டிக்கெட் எடுத்துப் பயணித்த மற்ற பயணிகள் அமர முடியாமல் அவதிப்பட்டனர். இது குறித்துப் பயணிகள் அளித்த புகாரின்…

Read more

SCOOTY-யில் பறக்கும் SUPER பாட்டி…. வயசு எல்லாம் விஷயமே இல்லை…. இணையத்தை கலக்கும் ஆச்சரியா வீடியோ….!!

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள ஒரு காணொளி தற்போது இணையவாசிகளைப் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவில், சுமார் 75 முதல் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர், தனது ஸ்கூட்டியில் ஒரு பெட்ரோல் பங்கிற்கு வந்து, தனது ஸ்கூட்டிக்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு,…

Read more

“தாத்தா வேடத்தில் நடிக்கப் போயுள்ளார்” 20,000 வாக்குகள் கூட கிடைக்காது…. செங்கோட்டைனை விளாசிய அண்ணன் மகன்….!!

அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சரும், ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ. செங்கோட்டையன், சமீபத்தில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். அவருக்கு அக்கட்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளர் என்ற முக்கியப் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று சென்னை அதிமுக…

Read more

“அதிமுக கோட்டையில் விஜய் வைத்த குறி!” – JCT பிரபாகரன் மகன் அமலன் தவெக-வில் இணைந்ததன் பின்னணி என்ன…?

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை, சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் பிரபல ஊடகவியலாளர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு இன்று (டிசம்பர் 21) நேரில் சந்தித்தார். அப்போது அவர் தன்னை தவெக-வில் அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொண்டார். அவருக்குக் கட்சியின் தேசிய பத்திரிகை…

Read more

கட்சியில் சேர்ந்த உடனே பதவி…. மகிழ்ச்சியின் உச்சியில் ஃபெலிக்ஸ் ஜெரால்டு…. தளபதியின் மெகா பிளான்….!!

தமிழக வெற்றிக் கழகத்தில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய அரசியல் பிரபலங்கள் அடுத்தடுத்து இணைந்து வருகின்றனர். அந்த வரிசையில், பிரபல யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு தவெக தலைவர் விஜய் முன்னிலையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார். அவர் கட்சியில் இணைந்த சில நிமிடங்களிலேயே,…

Read more

பண்டிகை கால ‘பிக்பாக்கெட்’…. ரூ.1,800 டிக்கெட் இப்போ ரூ.4,500…. விடுமுறைக்கு ஊருக்குச் செல்ல முடியாமல் தவிக்கும் பயணிகள்….!!

தமிழகத்தில் வரும் 24-ம் தேதி முதல் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை தொடங்குகிறது. அத்துடன் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை வருவதால், சென்னையில் தங்கிப் பணிபுரிபவர்கள் மற்றும் மாணவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளனர். இந்தத் தொடர் விடுமுறையைப் பயன்படுத்திக் கொண்ட…

Read more

6 தொகுதிகள் வேணும்…. ​”அதிமுக – பாஜகவுடம் கை கோர்க்கும் புதிய நீதிக்கட்சி” 2026 தேர்தலுக்கான மெகா கூட்டணி….!!

புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம் இன்று காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தனது கட்சியின் நிலைப்பாட்டை அவர் தெளிவுபடுத்தினார். வரவிருக்கும் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் இடம்பெறும் தேசிய…

Read more

“கட்டப்பையில் குழந்தையின் உடல்” – ஆம்புலன்ஸ் தராத அவலம்…. மருத்துவமனையின் மனிதாபிமானமற்ற செயல்….!!

ஜார்க்கண்ட் மாநிலம், பால்ஜோரி கிராமத்தைச் சேர்ந்த படிம்பா சதோம்பா என்பவர், தனது 4 மாதக் குழந்தைக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக சைபாஸா சதார் மருத்துவமனையில் அனுமதித்திருந்தார். துரதிர்ஷ்டவசமாக, கடந்த 19-ம் தேதி சிகிச்சை பலனின்றி அந்தக் குழந்தை உயிரிழந்தது. தனது குழந்தையின்…

Read more

அன்போடு அமமுக-வை தேடி வரும் கூட்டணிக் கட்சிகள்…. ​”முடிவைத் திணிக்க மாட்டேன்” டிடிவி தினகரன் சொன்ன தகவல்….!!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், வரவிருக்கும் தேர்தல் கூட்டணி குறித்துத் தனது நிலைப்பாட்டை வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். கூட்டணிக்காகத் தங்களை அணுகும் கட்சிகள் மிகவும் அன்போடும், மரியாதையோடும் நடத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கூட்டணியைத் தலைமை தாங்கும் கட்சிகளின் அணுகுமுறை…

Read more

“தூக்கத்தில் பேசுபவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது” – விஜய்யை அற்பத்தனமானவர் என விமர்சித்தாரா டி.ஆர்.பி. ராஜா….?

ஈரோட்டில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், திமுகவை “தீய சக்தி” என்று கடுமையாக விமர்சித்துப் பேசினார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவிடம் இது…

Read more

பைப்பால் அடித்து, கண்ணில் மிளகாய் பொடி தூவி….. மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு நடந்த கொடூரம்…. வெளியான அதிர்ச்சி காணொளி….!!

கர்நாடக மாநிலம் பாகல்கோட்டில் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகள் பள்ளியில், 16 வயது சிறுவன் ஒருவன் பள்ளி தாளாளரால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பள்ளியின் தாளாளர் அக்ஷய் என்பவர், சிறுவன் கீழே விழுந்து கதறியும்…

Read more

“ஒரே நேரத்தில் 8 இடங்களில் தீபங்கள்” பூரணசந்திரனுக்காக பாஜகவினர் நடத்திய அஞ்சலி…. அதிர வைத்த 180 பேர் மீதான வழக்கு….!!

மதுரை திருப்பரங்குன்றம் மலை மேல் தீபம் ஏற்ற அனுமதி கோரி போராடி, சமீபத்தில் உயிர்நீத்த பூரணசந்திரன் என்பவரின் ஆன்மா சாந்தியடைய வேண்டி, கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பாஜகவினர் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர். நாகர்கோவில் வடசேரி, கோட்டார், அஞ்சுகிராமம் உள்ளிட்ட…

Read more

கூட்டணி உறுதியானது…. ​”மாநில அந்தஸ்து முக்கியம், ஆனால்…” ரங்கசாமி சமாதானமானதன் பின்னணி என்ன….?

புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், மாநில அந்தஸ்து மற்றும் போதிய நிதி ஒதுக்கீடு கிடைக்கவில்லை என்ற அதிருப்தியில் முதல்வர் ரங்கசாமி இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இதனால் அவர் கூட்டணியிலிருந்து விலகக்கூடும் என்ற பேச்சு…

Read more

“காந்தியை ஈர்த்த இயேசுவின் போதனை” ஆளுநர் ரவி சொன்ன அந்த ஒரு வார்த்தை….!!

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று (டிசம்பர் 20) ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய ஆளுநர், இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை என்பது அன்பு, அமைதி, மன்னிப்பு மற்றும் கருணை ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு…

Read more

போர்க்களமான நெல்லை! – ‘Go Back Stalin’ முழக்கங்களால் அதிர்ந்த மாநகரம்: போலீஸ் அதிரடி நடவடிக்கை!

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக இன்று காலை திருநெல்வேலிக்கு வருகை தந்தார். அவர் வருகையையொட்டி மாநகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இருப்பினும், முதல்வரின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், பாரதிய ஜனதா…

Read more

​”சொன்னபடியே செய்த ஹர்திக்” – முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசி…. கம்பீருக்கு கொடுத்த மரண மாஸ் பதிலடி….!!

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 5-வது டி20 போட்டியில், இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா, ஹர்திக் பாண்டியாவின் அதிரடி 63 ரன்களின் உதவியுடன் 231 ரன்கள் குவித்தது. தென்னாப்பிரிக்கா…

Read more

மெஸ்ஸி கிளம்பிட்டார்…. ஆனா கொல்கத்தாவே எரியுது…. “50 கோடி நஷ்ட ஈடு வேணும்” கங்குலி Vs கால்பந்து ரசிகர்கள்…. முடிவில்லா மோதல்….!!

கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்திற்கு கால்பந்து நட்சத்திரம் மெஸ்ஸி வந்தபோது, பிரபலங்களின் தலையீட்டால் சாதாரண ரசிகர்கள் அவரைப் பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த குளறுபடிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ்…

Read more

அதிர்ச்சி அறிவிப்பு: 2026 உலகக்கோப்பை டீமில் ஜிதேஷ் சர்மா அவுட்…. இஷான் கிஷன் உள்ளே…. என்ன நடக்குது இந்திய அணியில்….?

2026 டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் செய்யப்பட்டுள்ள அதிரடி மாற்றங்கள் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. குறிப்பாக, துணைக்கேப்டனாக இருந்த சுப்மன் கில் நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக அக்சர் பட்டேல் அந்தப் பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால்,…

Read more

விஜய்க்கு ஒரு வில்லன்…. எனக்கு நாலு…. – சீமானின் அதிரடி கணக்கு…. இணையத்தைக் கலக்கும் வீடியோ….!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் அண்மையில் பேசிய காணொளி ஒன்று இணையதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதில், தனது தம்பி விஜய்க்கு அரசியலில் ஒரே ஒரு வில்லன் தான் என்றும், ஆனால் தமக்கு திமுக, அதிமுக, பாஜக மற்றும்…

Read more

நள்ளிரவில் பெண் நிர்வாகி வீட்டில் அத்துமீறல்…. பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் “Powerful Action” முழு விவரம் இதோ….!!

நாமக்கல் கிழக்கு மாவட்ட தமிழக வெற்றி கழகச் செயலாளராக இருந்த செந்தில்நாதன், அக்கட்சியின் பெண் நிர்வாகி ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்ததாக எழுந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்தை மீறிய உறவு காரணமாக அந்தப் பெண்ணின் வீட்டிற்குச் சென்ற…

Read more

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்: வந்தாச்சு புது ரூல்ஸ்…. இனி டிக்கெட் புக்கிங் செய்ய இது கட்டாயம்….!!

ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு ஒரு முக்கிய மாற்றத்தை இந்திய ரயில்வே (IRCTC) கொண்டு வந்துள்ளது. போலி கணக்குகள் மூலம் டிக்கெட்டுகளை மொத்தமாக முன்பதிவு செய்வதைத் தடுக்கவும், உண்மையான பயணிகளுக்கு டிக்கெட் கிடைப்பதை உறுதி செய்யவும், இனி ‘ஆதார் இணைப்பு’…

Read more

வயித்துல ஒரு பருக்கை சோறு கூட இல்ல…. வரதட்சனைக்காக பட்டினி போட்டு கொலை…. நீதிமன்றம் கொடுத்த அதிரடி தண்டனை….!!

கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் நடந்த இந்த கொடூர சம்பவம், வரதட்சணை கொடுமையின் உச்சகட்டமாகப் பார்க்கப்படுகிறது. கடந்த 2013-ம் ஆண்டு சந்துலால் என்பவருக்கும் துஷாரா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின் போது 25 பவுன் நகை மற்றும் 5 லட்சம்…

Read more

நெஞ்சை உலுக்கும் சோகம்: கல்யாணமாகி ரெண்டே மாசம் தான் ஆகுது…. அதுக்குள்ள இப்படியா….? ரயில் விபத்தில் பலியான புதுமணத் தம்பதி….!!

ஆந்திர மாநிலம் பார்வதிபுரம் மன்யம் மாவட்டத்தைச் சேர்ந்த சிம்மாசலம் என்பவருக்கும், பவானி என்பவருக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது. ரசாயனத் தொழிற்சாலையில் வேலை செய்து வந்த சிம்மாசலம், தனது மனைவியுடன் விஜயவாடாவில் உள்ள உறவினர் வீட்டிற்குச் செல்வதற்காக செகந்திராபாத்தில்…

Read more

மார்பகத்தை பார்த்து பேசுவார்கள்…. திமுக, அதிமுக மீது பகிரங்க குற்றச்சாட்டு…. நாம் தமிழர் பெண்ணின் அதிர்ச்சி வீடியோ….!!

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த பெண் ஒருவர் திராவிடக் கட்சிகள் குறித்து மிகவும் அதிரடியான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தான் கடந்த ஏழு ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சியில் இருப்பதாகவும், அதற்கு முன்பாக திமுக…

Read more

‘காட்டாட்சியை’ ஒழிக்க வேண்டும்…. SIR எதிர்க்க இதுதான் காரணம்…. பிரதமர் மோடியின் குற்றச்சாட்டு….!!

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நேரில் பங்கேற்க முடியாததால், பிரதமர் மோடி கொல்கத்தா விமான நிலையத்திலிருந்தே காணொலி வாயிலாக உரையாற்றினார். அப்போது பேசிய அவர், பீகாரில் ஒரு காலத்தில் நிலவிய அராஜகமான ‘காட்டாட்சியை’ ஒழித்தது…

Read more

பாஜகாவை எதிர்த்துக்கோங்க…. மாநில வளர்ச்சியை கெடுக்காதீங்க…. பிரதமர் மோடி வேண்டுகோள்….!!

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நேரில் பங்கேற்க முடியாததால், பிரதமர் மோடி கொல்கத்தா விமான நிலையத்திலிருந்தே காணொலி வாயிலாக உரையாற்றினார். அப்போது பேசிய அவர், அரசியல் ரீதியாக பாஜகவை நீங்கள் எதிர்த்தாலும் பரவாயில்லை, ஆனால்…

Read more

யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்…. “துரோகிகளுக்கு இடமில்லை” என கர்ஜித்த எடப்பாடி….. நான்கு தலைகள் அடியோடு நீக்கம்…. யார் யார் தெரியுமா….?

அதிமுகவின் கொள்கைகளுக்கும் குறிக்கோள்களுக்கும் எதிராகச் செயல்பட்டதாகக் கூறி, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் 4 பேரை கட்சிப் பொறுப்புகளில் இருந்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக நீக்கியுள்ளார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் சீமான் மரைக்காயர்,…

Read more

“#T20WorldCup2026” ரோகித், கோலி இல்லாத முதல் உலகக் கோப்பை…. வெளியான பெயர் பட்டியல்…. முக்கிய வீரரை தோக்கிய BCCI…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட பலமான இந்திய அணியை பிசிசிஐ இன்று (டிசம்பர் 20) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. டிபெண்டிங் சாம்பியனாகக் களம் காணும் இந்திய அணியைச் சூர்யகுமார் யாதவ் வழிநடத்த உள்ளார்.…

Read more

“அதிமுக அவைத்தலைவருக்கு என்னாச்சு?” – தீவிர சிகிச்சைப் பிரிவில் தமிழ்மகன் உசேன்…. தொண்டர்கள் அதிர்ச்சி….!!

அதிமுகவின் மூத்த தலைவரும், அக்கட்சியின் அவைத்தலைவருமான தமிழ்மகன் உசேன் (வயது 89), கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று (டிசம்பர் 20) சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயது முதிர்வு மற்றும் சோர்வு காரணமாக…

Read more

“பாஜகவைக் கண்டால் பயமா?”: திமுகவைச் சாடும் விஜய், பாஜகவை எதிர்க்கத் தயங்குவது ஏன்….? தமிமுன் அன்சாரியின் அதிரடித் தாக்குதல்….!!

திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிமுன் அன்சாரி, “திமுக தீய சக்தி, தவெக தூய சக்தி” என விஜய் பேசுவது வெறும் அடுக்கு மொழி அல்ல, அது ஒரு துடுக்கு மொழி என்று சாடியுள்ளார். ஆளுங்கட்சியான திமுகவை இவ்வளவு கடுமையாகத் தாக்கிப் பேசும்…

Read more

அதிர்ச்சி! கிழிந்ததா கூட்டணி ஒப்பந்தம்….? தவெக பக்கம் சாயும் காங்கிரஸ்….? திமுகவை அதிரவைத்த நாஞ்சில் சம்பத்….!!

தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்கக் காங்கிரஸ் கட்சி விரும்புவதாகத் தகவல்கள் வெளியான நிலையில், இதுகுறித்து நாஞ்சில் சம்பத் அதிரடியான கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளார். “தவெக-வுடன் கூட்டணி வைக்கக் காங்கிரஸிற்கு ஆசை இருக்கிறது” என்று அவர் விமர்சித்துள்ளார். கூட்டணி குறித்த முடிவை…

Read more

செவிலியர்கள் போராட்ட விகாரம்…. வேலை இருந்தா கொடுக்க மாட்டோமா….? அமைச்சரின் நறுக் விளக்கம்….!!

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், ஒப்பந்த செவிலியர்களின் பணி நிரந்தரம் குறித்த முக்கியமான அறிவிப்பை இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தபடி, இதுவரை 3,783 ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கப்பட்டுள்ளதாக அவர்…

Read more

சபரிமலையில் இனி இது கூடாது…. மீறினால் போலீஸ் நடவடிக்கை…. பக்தர்களுக்குப் பறந்த அவசர உத்தரவு….!!

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிந்து செல்லும் பக்தர்கள் பலர், அங்குள்ள புனிதமான 18 படிகள் மற்றும் மாளிகைப்புறம் உள்ளிட்ட பகுதிகளில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இத்தகைய செயல்கள் கோயிலின் புனிதத்தன்மையையும், பாதுகாப்பு நடைமுறைகளையும்…

Read more

“ஓட்டு போட மாட்டாங்கன்னு” 40 லட்சம் இஸ்லாமியர்கள் நீக்கம்….? சீமான் வைத்த அதிரடி குற்றச்சாட்டு….!!

தமிழகத்தில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பது குறித்து சீமான் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். ஆட்சியாளர்களுக்கு யாரெல்லாம் ஓட்டுப் போடமாட்டார்கள் என்று நினைக்கிறார்களோ, அவர்களைத் தேடித்தேடி நீக்குவதுதான் இந்த வாக்காளர் சரிபார்ப்புப் பணியின் நோக்கம் என்று அவர் கூறியுள்ளார். குறிப்பாக, நீக்கப்பட்டவர்களில்…

Read more

பிஞ்சு குழந்தைக்கு என்ன ஆச்சு….? தேவதை உடையில் சென்ற 5 வயது மகள்…. பிணமாகத் திரும்பிய கோரம்…. பள்ளியில் நடந்தது என்ன….?

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், யுகேஜி (UKG) படித்து வந்த 5 வயது சிறுமி தேஜாஸ்ரீ, இன்று காலை பள்ளிக்குச் சென்ற நிலையில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். பள்ளியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவிற்காக ‘ஏஞ்சல்’ உடையில்…

Read more

“11 வருஷம் பின்னோக்கி வந்துட்டோம்” 2014-ல தான் இப்படி இருந்தது…. ஒரே அடியில் காணாமல் போன 97 லட்சம் வாக்காளர்கள்….!!

தமிழகத்தில் அண்மையில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில், முன்னெப்போதும் இல்லாத வகையில் சுமார் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அக்டோபர் மாத நிலவரப்படி 6.41 கோடியாக இருந்த வாக்காளர் எண்ணிக்கை, தற்போது 5.45 கோடியாகக் குறைந்துள்ளது. இதில் உயிரிழந்தவர்கள் மற்றும் இரட்டைப்…

Read more

Other Story