அதிமுகவின் கொள்கைகளுக்கும் குறிக்கோள்களுக்கும் எதிராகச் செயல்பட்டதாகக் கூறி, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் 4 பேரை கட்சிப் பொறுப்புகளில் இருந்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக நீக்கியுள்ளார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் சீமான் மரைக்காயர், சீனி காதர்மொய்தீன், பக்கர் மற்றும் ஹமீது அப்துல்ரகுமான் மரைக்காயர் ஆகியோர் நீக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

​ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிமுகவை வலுப்படுத்தும் நோக்கில் உட்கட்சிப் பூசல்களைக் களைய இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. கட்சியின் கட்டுப்பாட்டை மீறிச் செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தயவுதாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இபிஎஸ் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். இந்த நீக்கம் ராமநாதபுரம் மாவட்ட அதிமுகவினர் இடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.