திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிமுன் அன்சாரி, “திமுக தீய சக்தி, தவெக தூய சக்தி” என விஜய் பேசுவது வெறும் அடுக்கு மொழி அல்ல, அது ஒரு துடுக்கு மொழி என்று சாடியுள்ளார். ஆளுங்கட்சியான திமுகவை இவ்வளவு கடுமையாகத் தாக்கிப் பேசும் விஜய், பாஜகவை விமர்சிக்க ஏன் தயங்குகிறார் என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார். பாஜகவின் மீதான விஜய்யின் இந்த மென்மையான அணுகுமுறைக்குப் பின்னால் இருக்கும் அச்சம் என்ன என்பது புரியவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

​மேலும், விஜய் அரசியலில் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும் என்றும், அவர் முதலில் பத்திரிகையாளர்களை நேருக்கு நேர் சந்திக்க வேண்டும் என்றும் தமிமுன் அன்சாரி வலியுறுத்தியுள்ளார். விஜய்யின் அரசியல் நகர்வுகள் பாஜகவிற்குச் சாதகமாக இருக்கிறதோ என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ள அவரது இந்த பேச்சு, சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.