மேற்கு வங்கத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நேரில் பங்கேற்க முடியாததால், பிரதமர் மோடி கொல்கத்தா விமான நிலையத்திலிருந்தே காணொலி வாயிலாக உரையாற்றினார். அப்போது பேசிய அவர், அரசியல் ரீதியாக பாஜகவை நீங்கள் எதிர்த்தாலும் பரவாயில்லை, ஆனால் அந்தப் பகையை வைத்து மாநிலத்தின் வளர்ச்சியைத் தடுத்து விடாதீர்கள் என்று அவர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.

மேலும், திரிணாமுல் காங்கிரஸ் அரசு சட்டவிரோதமாகக் குடியேறுபவர்களைப் பாதுகாப்பதிலேயே அதிக அக்கறை காட்டுவதாக அவர் குற்றம் சாட்டினார். இதன்காரணமாகவே அவர்கள் SIR போன்ற திட்டங்களைக் கடுமையாக எதிர்ப்பதாகக் குறிப்பிட்ட பிரதமர், மாநிலத்தின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம் மிக முக்கியம் என்பதை வலியுறுத்தினார்.