சினிமா படப்பிடிப்பு தளங்களில் ஆபத்தான சண்டைக் காட்சிகளைப் படமாக்கும் போது எதிர்பாராத விபத்துகள் ஏற்படுவது வழக்கம். ஆனால், இங்கு ஒரு திரைப்படத்தின் ஆக்ஷன் காட்சியைப் படமாக்கிய போது, நெட்டிசன்களை வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் வகையிலான ஒரு வினோதமான மற்றும் தர்மசங்கடமான விபத்து அரங்கேறியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வருகிறது.

சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஒரு குறிப்பிட்ட திரைப்படத்திற்கான சண்டைக் காட்சி விறுவிறுப்பாகப் படமாக்கப்படுவது தெளிவாகத் தெரிகிறது. அதில் ஒருவரை  பிடித்து அந்தரத்தில் தூக்கி வீசுவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. இதற்காக அந்த நபர் கிரேன் எனப்படும் ராட்சத இயந்திரத்தின் கயிற்றில் பாதுகாப்பாகக் கட்டப்பட்டு காற்றில் பறக்கவிடப்பட்டார்.

 

ஆனால், அவர் காற்றில் பறந்த அந்த நொடியில் யாரும் எதிர்பாராத ஒரு திருப்பம் ஏற்பட்டது. அவர் அணிந்திருந்த ஆடை  எதிர்பாராதவிதமாக அந்த கிரேனின் கொக்கியில் மாட்டிச் சிக்கிக்கொண்டது. இதனால் நிலைதடுமாறிய அந்த நபர், காற்றில் தலைகீழாகத் தொங்கும் நிலை ஏற்பட்டது. துரதிர்ஷ்டவசமாக அவர் தலைகீழாகத் தொங்கிய போது, அவரது உடைகளும் கழன்று கீழே நழுவியதால் படப்பிடிப்பு தளமே ஒரு நிமிடம் ஸ்தம்பித்தது.

அதிர்ச்சியடைந்த படக்குழுவினர் உடனடியாக ஓடிவந்து, காற்றில் தலைகீழாகத் தொங்கிய அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆபத்தான விபத்தாக முடிய வேண்டிய இந்தச் சம்பவம், ஆடை நழுவிய வினோத திருப்பத்தால் இணையத்தில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. எக்ஸ்  தளத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் பார்த்து வரும் நிலையில், “நல்லவேளை உள்ளாடை அணிந்திருந்தார், மானம் காக்கப்பட்டது” என்றும், “ஆக்ஷன் படத்திலிருந்து ஒரே நொடியில் ரொமான்டிக் படமாக மாறிவிட்டது” என்றும் நெட்டிசன்கள் பலவாறாகக் கிண்டலடித்துக் கமெண்ட் செய்து வருகின்றனர்.