விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூர் ஆகியோர் இன்று இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, “மத்திய அரசுக்கு எதிராக முதலமைச்சர் விஜய் இதுவரை எந்தக் கருத்தும் பேசவில்லையே?” என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்குத் தனது பாணியில் அதிரடியான பதிலடி கொடுத்த திருமாவளவன், “மத்திய அரசுக்கு எதிராக நாங்கள் (கூட்டணிக் கட்சிகள்) பேசிக் கொண்டுதான் இருக்கிறோம்.
”Talk Less Wrok More” என்பதை முதலமைச்சர் விஜய் பின்பற்றுகிறார்”
மத்திய அரசுக்கு எதிராக முதலமைச்சர் பேசுவது இல்லையே என்ற கேள்விக்கு விசிக தலைவர் திருமாவளவன் திருமாவளவன் பதில் #CMVijay #Thirumavalavan #ManickamTagore #VCK #Congress #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/yRShUDVPt8
— News18 Tamil Nadu (@News18TamilNadu) July 10, 2026
அதற்கு முதலமைச்சர் விஜய் எந்தவொரு எதிர்ப்பும் தெரிவிக்கவில்லையே! இதிலிருந்தே நாங்கள் பேசுவதில் அவருக்கு உடன்பாடு இருக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியதுதானே? கூட்டணியில் இருக்கும் எங்களை ‘இவ்வாறு பேசக்கூடாது’ என்று அவர் எங்கும் கண்டிக்கவில்லை. அதனால், எங்கள் பேச்சில் முதலமைச்சருக்கும் உடன்பாடு இருக்கிறது என்றுதானே அர்த்தம்?” என்று சுட்டிக்காட்டினார். மேலும், முதலமைச்சர் விஜய் அவர்கள் “Talk less, Work more” (குறைவாகப் பேசு, நிறைவாக வேலை செய்) என்ற முறையைப் பின்பற்றி வருவதாகவும் திருமாவளவன் பிரஸ் மீட்டில் தெரிவித்தார்.
