கரூரில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், திமுக ஆட்சிக் காலத்தின் மீதும், கரூர் விவகாரங்கள் குறித்தும் முதலமைச்சர் விஜய் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துப் பேசியுள்ளார். அவர் பேசுகையில், “தி.மு.க ஆட்சியை வைத்துக்கொண்டு ஊரை அடித்து உலையில் போட்டு கொள்ளை அடித்ததால் தான், கரூர் கம்பெனி ஓனர் ஒருவர் எங்கே இருக்கிறோம் என்றே தெரியாமல் ‘ஓடு.. ஓடு.. ஓடு..’ என்று ஓடிக்கொண்டிருக்கிறார்.
இன்னொருவர் வெளிநாடு போய் ஒளிந்துகொண்டார். இன்னும் எத்தனை பேர் மாட்டப் போகிறார்களோ தெரியவில்லை!” என்று அதிரடியாகப் போட்டுடைத்தார். தி.மு.க தலைவர்களைக் குறிவைத்து முதலமைச்சர் விஜய் கரூரிலேயே வைத்துப் பேசிய இந்த ‘டார்கெட்’ பேச்சு, தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
