கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் விஜய், “கொளத்தூரில் நாம் வெறும் ஐந்து நிமிடம்தான் பேசினோம், அதற்கே அங்கு கொத்து புரோட்டா போட்டுவிட்டோம்!” என்று திமுக-வை மிகக் கடுமையாக வம்புக்கு இழுத்துப் பேசியிருந்தார். முதலமைச்சர் விஜய்யின் இந்த ‘கொத்து புரோட்டா’ விமர்சனம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், இதற்கு திமுக பொதுச்செயலாளரும் மூத்த அமைச்சருமான துரைமுருகன் தனது பாணியில் செம நக்கலாகப் பதிலடி கொடுத்துள்ளார்.

​வேலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த துரைமுருகனிடம், “கொளத்தூரில் பேசியதற்கே கொத்து புரோட்டா போட்டுவிட்டோம் என்று முதல்வர் விஜய் பேசியுள்ளாரே?” எனச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குத் தனது வழக்கமான நக்கல் பாணியில் சிரித்துக்கொண்டே பதிலளித்த துரைமுருகன், “சால்னா கடை விமர்சகருக்கெல்லாம் நான் பதில் சொல்ல விரும்பவில்லை!” என்று மிக ஒற்றை வரியில் விஜய்யை டோட்டலாக டேமேஜ் செய்யும் வகையில் கலாய்த்துத் தள்ளியுள்ளார்.