கரூர் நிகழ்ச்சியில் இன்று கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் விஜய், லஞ்ச ஒழிப்பு மற்றும் அரசு நிர்வாக சீர்திருத்தம் குறித்து அதிரடியான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
அவர் பேசுகையில், “லஞ்சம் எல்லாம் ஒழிக்க முடியாது, ஊழல் எல்லாம் ஒழிக்க முடியாது, அதெல்லாம் பிளட்லயே ஊறிப்போய் இருக்கிறது என்று சொன்னவர்கள் எல்லோரும் இப்போது ஒவ்வொரு அரசு அலுவலகமாகச் சென்று பாருங்கள்! ஒரு பைசா லஞ்சம் இல்லை, ஒரு பைசா ஊழல் இல்லை! வேலை எல்லாம் சும்மா டக்கு டக்கு என்று நடக்கிறது. அங்கே வந்த ஒரு பெரியவர் சொல்கிறார், ‘தம்பி, வேலை எல்லாம் நடக்கிறது, ஆனால் அதையும் தாண்டி எங்களுக்கு மரியாதை கொடுக்கிறார்கள்; உட்கார வைத்துப் பேசுகிறார்கள். இதெல்லாம் இதற்கு முன்பு நடந்ததே இல்லை.
அரசு துறைகளில் ஊழல், லஞ்சத்தை ஒழித்துள்ளோம் – முதலமைச்சர் விஜய் #Karur #CMVijay #PublicMeeting #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/UgEVmDQ8Yb
— News18 Tamil Nadu (@News18TamilNadu) July 10, 2026
அவனைப் போய் பார், இந்த அதிகாரியைப் பார் என்று அலைக்கழிப்பார்கள். இப்போது லஞ்சம் இல்லை, ஊழல் இல்லை, வேலை எல்லாம் உடனே உடனே நடக்கிறது’ என்று மக்கள் அப்படி ஒரு பெருமூச்சு விடுகிறார்கள்! அதைப் பார்த்து நமக்கு அப்படி ஒரு சந்தோஷம்! இதற்கு மேல் என்ன வேண்டும்? ஏன் இதெல்லாம் பண்ண முடியாது? மனசுன்னு இருந்தா பண்ணலாம்!” என்று முதலமைச்சர் விஜய் உணர்ச்சிபொங்கப் பேசினார்.
