“தினமும் காலையில ஒன்பது டூ அஞ்சு ஆபீஸ் போயிட்டு ₹45,000 சம்பளத்துக்காக கார்ப்பரேட் கம்பெனியில அடிமை மாதிரி கிடந்த வாழ்க்கையே எனக்கு வெறுத்துப் போச்சுங்க, அதான் அந்த வேலையைத் தூக்கிப் போட்டுட்டு இப்ப சுவிட்சர்லாந்துல செட்டிலாயிட்டேன்!”

என்று இந்தியப் பெண்ணான சினேக் கவுர் தனது வாழ்க்கையில் நிகழ்த்திய அந்த அசாத்திய சாதனை குறித்து சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ள நெகிழ்ச்சியான பதிவு தற்பொழுது ஒட்டுமொத்த கார்ப்பரேட் ஊழியர்களிடையேயும் மிகப்பெரிய வைரலாகப் பரவி வருகிறது.

ஆரம்பத்தில் கல்வி கற்று ஒரு வேலையைப் பெற்று பதவி உயர்வு அடைவதுதான் உண்மையான வெற்றி என்று நினைத்த சினேக் கவுர், காலப்போக்கில் குறிப்பிட்ட ஒரு நிறுவனத்திற்குள் கட்டுப்படாமல் தனக்குப் பிடித்த இடத்திற்குப் பயணம் செய்து விரும்பியபடி வாழ விரும்பியுள்ளார்.

“>

இதற்காக அவர் ஸ்பானிஷ் மொழியைக் கற்றுக்கொண்டு, அந்தத் தனித்துவமான மொழித்திறன் மூலம் ஸ்பெயின் நாட்டிற்குப் பயணம் செய்து உலகளாவிய மனிதர்களுடன் தொடர்பை ஏற்படுத்தியதுடன், அங்கு தங்கியிருந்தபோதே ஆன்லைன் வழியாக ஸ்பானிஷ் மொழி சொல்லித் தருவது, பயண வழிகாட்டியாகச் செயல்படுவது மற்றும் ஆன்லைன் தொழில்முனைவோருக்கான வழிகாட்டுதல் திட்டங்கள் எனப் பல்வேறு வழிகளில் தனது வருமானத்தை பன்மடங்கு விரிவுபடுத்தியுள்ளார்.

இதன் மூலம் எந்தவொரு கார்ப்பரேட் வேலையும் இல்லாமல், வெறும் ஒரு லேப்டாப் மற்றும் ஆன்லைன் குழுவின் உதவியுடன் உலகின் மிக விலையுயர்ந்த நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்தில் கடந்த 6 மாதங்களாகத் தனது சொந்த உழைப்பில் ராணி போலச் சுதந்திரமாக வாழ்ந்து காட்டி ஒட்டுமொத்த இளைஞர்களுக்கும் சினேக் கவுர் பெரும் ஊக்கமளித்து வருகிறார்.