மதுரை திருப்பரங்குன்றம் மலை மேல் தீபம் ஏற்ற அனுமதி கோரி போராடி, சமீபத்தில் உயிர்நீத்த பூரணசந்திரன் என்பவரின் ஆன்மா சாந்தியடைய வேண்டி, கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பாஜகவினர் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர். நாகர்கோவில் வடசேரி, கோட்டார், அஞ்சுகிராமம் உள்ளிட்ட 8 முக்கிய இடங்களில் இந்தத் தீபங்கள் ஏற்றப்பட்டன. இதில் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர். காந்தி உள்ளிட்ட ஏராளமான பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இந்தச் சூழலில், அனுமதியின்றி பொது இடங்களில் தீபங்களை ஏற்றி பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறி காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக நாகர்கோவில் எம்.எல்.ஏ எம்.ஆர். காந்தி உட்பட சுமார் 180 பேர் மீது போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். அஞ்சலி செலுத்தும் நிகழ்வு வழக்காக மாறியிருப்பது அந்தப் பகுதியில் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
