சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு அதிர்ச்சி வீடியோ நெட்டிசன்களை உறைந்து போகச் செய்துள்ளது. கணவன், மனைவி மற்றும் ஒரு சிறு குழந்தை என மூவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக பெற்றோர் இருவரும் ஓடும் பைக்கில் இருந்து கீழே விழுந்துள்ளனர். ஆனால், அவர்கள் விழுந்த பிறகும் அந்த பைக் நிக்காமல், குழந்தை மட்டும் தனியாக இருக்க, தானாகவே சீறிப் பாய்ந்து முன்னேறிச் சென்றுள்ளது.
கிட்டத்தட்ட 500 மீட்டர் தூரம் வரை அந்த மோட்டார் சைக்கிள் எந்த ஒரு பிடிமானமும் இல்லாமல், குழந்தை மட்டும் அமர்ந்திருந்த நிலையில் நேராகச் சென்றுள்ளது. அதிர்ஷ்டவசமாக, சாலையோரம் இருந்த அடர்ந்த புற்கள் நிறைந்த பள்ளப்பகுதிக்குள் பைக் மெதுவாகச் சாய்ந்ததால், அந்த சிறு குழந்தை எவ்வித காயமுமின்றி அற்புதாமாக உயிர் தப்பியது. இந்த திகிலூட்டும் வீடியோ தற்போது பல மில்லியன் பார்வைகளைக் கடந்து இணையத்தில் தீயாய் பரவி வருவதுடன், குழந்தைகளை பைக்கில் அழைத்துச் செல்லும்போது பெற்றோர் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்ற காரசாரமான விவாதத்தையும் கிளப்பியுள்ளது.
