ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்துள்ள நிலையில், அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வெளியே இந்தியாவிற்கும், பிரதமர் மோடிக்கும் எதிராக ஆஸ்திரேலிய இன்ஃப்ளூயன்ஸர் ஹ்யூகோ லெனான் என்பவர் மிக மோசமான வசைச்சொற்களைப் பயன்படுத்தி கோஷமிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் நடுரோட்டில் நின்று அநாகரீகமான முறையில் கத்தி ரகளை செய்துகொண்டிருந்தபோது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த ஆஸ்திரேலிய போலீசார் உடனடியாக தலையிட்டு, அவரை அந்தப் பகுதியில் இருந்து வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று அப்புறப்படுத்தினர்.

​இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி, உலக அளவில் தீயாய் பரவி வருகிறது. இன்ஃப்ளூயன்ஸர் ஹ்யூகோ லெனான் இந்தியாவிற்கு எதிராகவும், இந்தியப் பிரதமருக்கு எதிராகவும் இவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொண்டதை நெட்டிசன்கள் பலரும் கடுமையாகக் கண்டித்து வருகின்றனர். சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ள இந்த வீடியோ, இரு நாட்டு மக்களிடையேயும் தற்போதைய ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.