ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள மார்வெல் ஸ்டேடியத்தில் திரண்டிருந்த சுமார் 30 ஆயிரம் இந்திய வம்சாவளியினரிடையே பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியபோது அரங்கேறிய சுவாரசியமான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by News18 India (@news18india)

பிரதமர் மோடி மேடையில் உணர்ச்சிப்பூர்வமாக உரையாற்றிக் கொண்டிருந்தபோது, மேடைக்குப் பின்னால் நின்றுகொண்டிருந்த பெண் புகைப்படக் கலைஞர்  ஒருவர், பிரதமரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கையாட்டி சைகை செய்துள்ளார். அடுத்த சில விநாடிகளில் பிரதமர் மோடி சற்றும் தயங்காமல் அப்படியே பின்னால் திரும்பி கேமராவைப் பார்க்க, அந்தப் பெண் துரிதமாக அவரது படத்தை அழகாகக் கிளிக் செய்துள்ளார்.

‘மோடி-மோடி’ என்ற முழக்கங்களுடன் அரங்கம் அதிர அரங்கேறிய இந்தச் சில விநாடி காட்சி, லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று இணையவாசிகளைப் பெரிதும் கவர்ந்துள்ளது. பிரதமரின் எளிய அணுகுமுறையையும், அந்தப் பெண் புகைப்படக் கலைஞரின் சரியான நேரத் திறமையையும் நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.