“கௌதம் காம்பீர் ஒரு  Rubbish ( மதிப்பற்ற, பயனற்ற அல்லது தேவையற்ற பொருள்), அவரால இங்கிலாந்து மண்ணுல கிரிக்கெட் விளையாடவே முடியாது!” என்று கடந்த 2014-ஆம் ஆண்டு இங்கிலாந்து ஜாம்பவான் ஜெஃப்ரி பாய்காட் நேரடியாக கௌதம் காம்பீரின் பேட்டிங்கை வசைபாடிய அந்தப் பழைய வசவுச்சொல், சரியாக 12 வருடங்களுக்குப் பிறகு தற்பொழுது இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருக்கும் அவரது மோசமான ‘பயிற்சி மற்றும் தேர்வு தந்திரங்களுக்கு’ கச்சிதமாகப் பொருந்தி ஒரு புதிய அர்த்தத்தைக் கொடுத்துள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்தியா 3-0 எனப் படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, பிரிஸ்டல் மைதானத்தில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரும், பயிற்சியாளர் கௌதம் காம்பீரும் சைகைகள் ஏதுமின்றி மிகுந்த ஏமாற்றத்துடன் நீண்ட நேரம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்ட புகைப்படம் தற்பொழுது இணையத்தில் தீயாய் பரவி வரும் நிலையில்,

கடந்த 2025 ஓவல் டெஸ்டில் சிராஜ் நிகழ்த்திய அற்புதம் போன்ற எதுவும் இந்த முறை காம்பீரைக் காப்பாற்ற நிகழாததால் அவரது சுமாரான திட்டமிடல் மற்றும் பிளேயிங் லெவன் தேர்வுகள் அப்பட்டமாக அம்பலமாகியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by CricHeads (@cric.heads)

“>

அயர்லாந்து மைதானத்தின் பரிமாணங்களைக் கூடக் கணக்கில் கொள்ளாமல் அசிங்கப்பட்ட இந்திய அணி, தற்பொழுது பிரிஸ்டலிலும் இங்கிலாந்தின் வியூகங்களை எதிர்கொள்ளத் தெரியாமல் 13.5 ஓவர்களிலேயே இலக்கை வாரி வழங்கியதும், டிரென்ட் பிரிட்ஜில் 76 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி வரலாற்றிலேயே தங்களது இரண்டாவது மிகக் குறைந்த ஸ்கோரைப் பதிவு செய்ததும் பெரும்  தோல்வியாகப் பார்க்கப்படும் வேளையில்,

“டி20-யில் 2 சதம் அடித்த திலக் வர்மாவை 3-வது இடத்திலிருந்து மாற்றி 6-வது இடத்தில் களம் இறக்கியது ஏன், ஷிவம் துபேயின் ரோல் என்ன, அக்சர் படேல் ஏன் புறக்கணிக்கப்பட்டார்,

வாஷிங்டன் சுந்தரை வைத்துக் கொண்டு மாற்று பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தாதது ஏன்?” என அனில் கும்ப்ளே மற்றும் வருண் ஆரோன் ஆகியோர் காம்பீரின் விசித்திரமான முடிவுகள் குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளது இந்திய கிரிக்கெட்டில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

“>