‘பணம் மழையாகக் கொட்டுகிறது’ என்ற வார்த்தையை நாம் பலரும் பேச்சளவில் கேட்டிருப்போம்; ஆனால், இந்தியாவில் உள்ள ஒரு நபரின் வாழ்வில் அது நிஜமாகவே நடந்துள்ளது. இந்தியாவில் பெய்து வரும் கனமழை காரணமாக வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்து வரும் நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வரும் ஒரு விசித்திரமான வீடியோ அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவில், நபர் ஒருவரின் வீட்டிற்குள் வெள்ளநீர் புகுந்து கொண்டிருக்கிறது. ஆனால், ஆச்சரியப்படும் விதமாக அந்த வெள்ளநீரோடு சேர்ந்து, வண்ண வண்ண ரூபாய் நோட்டுகளும் கட்டுகளாக அந்த வீட்டிற்குள் மிதந்து வருகின்றன.

 

 

View this post on Instagram

 

A post shared by Memeinions (@memeinions.in)

இதைப் பார்த்த நெட்டிசன்கள், வெள்ளம் வந்தாலும் இப்படியொரு அதிர்ஷ்டம் வரவேண்டும் என வாயடைத்துப் போயுள்ளனர். இந்த வீடியோ எந்தப் பகுதியில் எடுக்கப்பட்டது என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை என்றாலும், சமூக வலைதளங்களில் பல லட்சம் பார்வைகளைக் கடந்து இது வேகமாகப் பரவி வருகிறது.

இந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள் தங்களின் பாணியில் விதவிதமாகக் கமெண்ட்டுகளைத் தட்டிவிட்டு வருகின்றனர். நெட்டிசன் ஒருவர், “இதற்குப் பெயர்தான் நிஜமான கேஷ் மழை” என குறிப்பிட்டுள்ளார். மற்றொருவரோ, “இனிமேல் இப்படிப் பணம் வருவதற்காகவே நான் தரைத்தளத்தில் தான் தான் வீடு எடுத்துத் தங்குவேன்” என்று நகைச்சுவையாகப் பதிவிட்டுள்ளார்.