வடசென்னை வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் சேகர்பாபு, சென்னை தீவுத்திடல் மற்றும் ஸ்டான்லி மருத்துவமனை சாலைப் பகுதிகளில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஹெச்.ராஜாவை கடுமையாகச் சாடினார். மக்களை மதத்தாலும், இனத்தாலும் பிளவுபடுத்த நினைக்கும் ஒரு தீய சக்தியாக ஹெச்.ராஜா செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டினார்.

​மேலும், திரையரங்குகளில் வெளியிடுவதற்கு கூட தகுதி இல்லாத ஒரு திரைப்படத்தில் ஹெச்.ராஜா நடித்திருப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர், அவரை ஒரு தகுதியற்ற நபர் என்று விமர்சித்தார். “உதவாக்கரை ராஜாக்களால்” திமுக ஆட்சியை எந்த வகையிலும் அசைக்க முடியாது என்று கூறிய அவர், வளர்ச்சிப் பணிகளுக்கு இடையே இதுபோன்ற விமர்சனங்களுக்கு அஞ்சப்போவதில்லை என்பதையும் உறுதிபடத் தெரிவித்தார்.