ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற மூதாட்டி ஒருவர், விஜய்யின் மீதான தனது அபார நம்பிக்கையை மிகவும் எதார்த்தமாகப் பகிர்ந்து கொண்டார். அவர் பேசுகையில், “எம்.ஜி.ஆர் என்பது மூன்றெழுத்து, விஜய் என்பதும் மூன்றெழுத்து… இந்த மூன்றெழுத்துக்கு 2026-ல் வெற்றி உண்டு! நாங்க காசுக்காகவோ பணத்துக்காகவோ வரவில்லை, ஒரு குவாட்டர் பிரியாணிக்காகவும் வரல. வயசானவங்க எல்லாம் வர வேண்டாம்னு சொன்னாங்க, ஆனா நாங்க வந்திருக்கோம்” என்று நெஞ்சுறுதியுடன் தெரிவித்தார்.

​மேலும் அவர் கூறுகையில், “விஜய் ஜெயிக்கணும், நல்ல ஆட்சி வரணும், மக்களுக்கு நல்லது செய்யணும்… அதுதான் எங்களோட கோரிக்கை. எம்.ஜி.ஆர் மீது எப்படி நம்பிக்கை வைத்தோம்? அவரும் படத்தில் நடித்தவர் தானே? அதேபோல விஜய்யையும் அடுத்த எம்.ஜி.ஆராகப் பார்க்கிறோம். யார் என்ன பேசினாலும் ஓட்டு போடுவது விஜய்க்குத்தான். 2026-ல் வெற்றி அவருக்குத்தான்” என்று உணர்ச்சி பொங்கப் பேசியுள்ளார். எந்த எதிர்பார்ப்புமின்றி ஒரு மூதாட்டி பேசிய இந்த வார்த்தைகள் தற்போது இணையத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.