பிரபல நடிகை திரிஷா மற்றும் முதலமைச்சர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த காரணத்திற்காக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அதிரடியாக கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். இதில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியில் பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்த நிலையில் ஆபாசமாக அவர் பேசியதாக பலரும் விளாசினார்.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் இது தொடர்பாக தற்போது பரபரப்பான கருத்துக்களை தெரிவித்துள்ளார். அவர் பேசியதாவது, அப்படியே இந்த விவகாரத்தில் அந்த பெண்மணியின் மனது புண்பட்டிருந்தால் போற்றுதலுக்குரிய வழக்கத்திற்குரிய மரியாதைக்குரிய அம்மையார் செல்வி திரிஷா அவர்கள் தஞ்சாவூரில் புகார் கொடுத்தாலோ அல்லது பட்டினப்பாக்கத்தில் புகார் கொடுத்தாலோ அல்லது சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுத்தாலோ சென்னை கமிஷனரை பார்த்து புகார் கொடுத்தாலோ மகளிர் ஆணையத்தில் புகார் கொடுத்திருந்தாலோ நடவடிக்கை எடுத்திருந்தால் தப்பில்லை.

 

 

View this post on Instagram

 

A post shared by SRV Vignesh Waran (@iamsrvvignesh)

போச்சுதலுக்குரிய வழக்கத்திற்குரிய மரியாதைக்குரிய செல்வி அம்மையார் திரிஷா அவர்கள் புகார் கொடுக்காமல் யாரோ ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் எப்படி நீங்க ஒருவரை அவசரமாக கைது செய்ய முடியும் என்று கேள்வி எழுப்பினார். மேலும் ஒவ்வொரு முறையும் அவர் பேசும்போது நொடிக்கு நொடி போற்றுதலுக்குறிய  வழக்கத்திற்குரிய மரியாதைக்குரிய திரிஷா என்று கூறினார். மேலும் இதில் அவர் வணக்கம் என்பதை வழக்கம் என்று தவறாக பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரம்பிலையில் பலரும் தங்கள் கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.