இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள ஒரு காணொளி தற்போது இணையவாசிகளைப் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவில், சுமார் 75 முதல் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர், தனது ஸ்கூட்டியில் ஒரு பெட்ரோல் பங்கிற்கு வந்து, தனது ஸ்கூட்டிக்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு, அங்கிருந்து சுறுசுறுப்பாக வண்டியை ஓட்டிச் செல்லும் காட்சிகள் அதில் பதிவாகியுள்ளன.
இந்தக் காணொளியைப் பார்த்த பலரும், அந்த மூதாட்டியின் தன்னம்பிக்கையையும் உடல் வலிமையையும் பாராட்டி வருகின்றனர். “வயது என்பது ஒரு சாதாரண எண் மட்டுமே” என்பதை இந்தப் பாட்டி மீண்டும் ஒருமுறை நிரூபித்துவிட்டதாக நெட்டிசன்கள் நெகிழ்ச்சியுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர். எந்த உதவியும் இன்றி, இத்தனை வயதிலும் தனது வேலையைத் தானே பார்த்துக்கொள்ளும் அந்தப் பாட்டியின் செயல் பலருக்கும் உத்வேகத்தை அளிப்பதாக அமைந்துள்ளது.
