சமூக ஊடகங்களில் சமீப காலமாக வீடியோ ஒன்று காட்டுத்தீயாய் பரவி வருகிறது. அதில், பெட்ரோல் பங்க் ஒன்றில் இருசக்கர வாகனம் ஒன்றுக்கு ஈ85 (E85 Ethanol) எத்தனால் எரிபொருள் நிரப்பப்படும் போது, அதன் எரிபொருள் தொட்டியைச் சுற்றி ஏராளமான தேனீக்கள் மொய்ப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த வீடியோ இணையவாசிகளிடையே பெரும் வியப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திய நிலையில், ‘லைட்ஹவுஸ் ஜெர்னலிசம்’ அமைப்பு இதன் உண்மைத்தன்மை குறித்து தீவிர ஆய்வில் இறங்கியது.
@nitin_gadkari Appreciate 🥰
No need for fuel quality labs anymore! 😄
Honey 🐝 Bees have been #officially appointed as Chief Inspectors for:
✅ E20 ✅ E30 ✅ E85 ✅ E100
If the bees gather around the fuel pump, the #ethanol quality is certified 💥 🐝⛽ pic.twitter.com/5MNozomknP— Rise UP For Rights ® 🇮🇳 (@riseupforrights) June 14, 2026
இந்த வீடியோ குறித்து, உலகளவில் ஏதேனும் நம்பகமான செய்திகள் வெளியாகியுள்ளதா எனத் தேடியபோது அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த வீடியோவின் முக்கிய காட்சிகளை (Key-frames) ‘InVid’ தொழில்நுட்பக் கருவி மூலம் பிரித்தெடுத்து ஆய்வு செய்தபோது, அதன் இடது கீழ் மூலையில் ஒரு வாட்டர்மார்க் (Watermark) இருப்பது கண்டறியப்பட்டது. அது ‘கூகுள் ஜெமினி’ (Google Gemini) செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பியது.
தொடர்ந்து, கூகுளின் ஏஐ உள்ளடக்கங்களைக் கண்டறியும் ‘சிந்த்ஐடி’ (SynthID) கருவி மூலம் பரிசோதித்ததில், அது “made with Google AI (video)” அதாவது கூகுள் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட போலி வீடியோ என்பது உறுதியானது. எனவே, எத்தனால் எரிபொருளை நோக்கி தேனீக்கள் வருகின்றன என்று பரவும் இந்த வீடியோ முற்றிலும் ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட ஒரு கற்பனையான போலி வீடியோ என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
