பெற்றோர்கள் தங்களின் உலகம் எதுவோ, அதைத் தங்கள் பிள்ளைகளுக்கும் காட்ட விரும்புவார்கள். அந்த வகையில், ஒரு விமானி தந்தை தனது 8 மாதக் குழந்தையை முதன்முறையாக விமானத்தின் காக்பிட் (Cockpit) பகுதிக்கு அழைத்துச் சென்ற வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் பலரின் இதயங்களை வென்றுள்ளது.
விமானி ஆகாஷ் கண்ணா தனது மகன் அகஸ்தியாவைத் தனது பணி இடத்திற்கு அழைத்துச் செல்லும் இந்த 57 வினாடி வீடியோ, தந்தை-மகன் இடையேயான ஆழமான பாசத்தை வெளிப்படுத்துகிறது.
View this post on Instagram
குழந்தையின் தாய் குஞ்சன் ஆப்தே பகிர்ந்துள்ள இந்த வீடியோவில், காக்பிட்டில் இருந்தபடி தனது மகனை ஆகாஷ் கண்ணா உற்சாகத்துடன் வரவேற்பது நெஞ்சைத் தொடும் வகையில் உள்ளது.
காக்பிட்டிற்குள் நுழைந்த அகஸ்தியா, அங்குள்ள பட்டன்கள், திரைகள் மற்றும் கருவிகளைப் பார்த்து வியப்பில் ஆழ்ந்தான். “தனது தந்தையுடன் மகனின் முதல் பயணம்” எனப் பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் பார்த்து ரசித்துள்ளனர்.
“இது வெறும் வீடியோ மட்டுமல்ல, ஒரு தந்தை தனது மகனுக்குத் தனது உலகத்தைக் காட்டும் உன்னதமான தருணம்” என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
