டெலிவரி ஊழியரின் விசித்திரத் திருட்டு வீடியோ தற்பொழுது இணையத்தில் மாபெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் வசிக்கும் வாடிக்கையாளருக்குப் பார்சல் வழங்குவதற்காக வந்த டெலிவரி ஊழியர், கதவுக்கு வெளியே நின்று நீண்ட நேரம் காத்திருந்தும் யாரும் வராததால், கதவை லேசாகத் திறந்து தான் கொண்டு வந்த பொருட்களைப் பத்திரமாக உள்ளே வைக்கிறார்.

பொருட்களை உள்ளே வைத்த பின்னர் உடனடியாக அங்கிருந்து கிளம்பாமல், சுற்றும் முற்றும் பார்த்துவிட்டுத் திருட்டுத்தனமாகக்கதவுக்கு வெளியே கிடந்த வாடிக்கையாளரின் விலை உயர்ந்த காலணிகளை எடுத்து தனது பைக்குள் போட்டுக்கொண்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

இந்த ஒட்டுமொத்த சம்பவமும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வரும் சூழலில், “இதுபோன்ற ஒழுக்கமற்ற நடத்தைகள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது” எனப் பலரும் அந்த ஊழியரைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

<a href=”http://

“>

அதே சமயம், “இது பார்வைகளைப் பெறுவதற்காகத் திட்டமிட்டு எடுக்கப்பட்ட போலி வீடியோவாக இருக்கக் கூடும்” என்றும் நெட்டிசன்கள் தங்களது சந்தேகங்களை எழுப்பி வருவதால் இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளில் ஆக்கிரமித்துள்ளது.