சமூக ஊடகங்களில் தினமும் பல விசித்திரமான வீடியோக்கள் வெளியாகி வரும் நிலையில், தற்போது தந்திரமான முறையில் மிக எளிதாகப் பணம்என்னும் ஐடியா குறித்த   வீடியோ ஒன்று இணையவாசிகளைப் பெரிதும் கவர்ந்துள்ளது. பொதுவாக வங்கிகளிலும் பெரிய கடைகளிலும் இயந்திரங்கள் மூலம் பணம் எண்ணப்படுவதையே நாம் பார்த்திருப்போம். ஆனால், எந்தவித செலவும் இல்லாமல், வீட்டில் இருக்கும் எளிய பொருட்களைக் கொண்டு மிகக் குறைந்த நேரத்தில், மிகத் துல்லியமாக ரூபாய் நோட்டுகளைக் கையாண்டு எண்ணும் இந்த எளிய தமிழ்நாட்டுப் பாணி உத்தி, பார்ப்போரைக் கண் இமைக்காமல் ரசிக்க வைத்துள்ளது. இந்த தனித்துவமான யோசனை, சாதாரண மக்களின் புத்திசாலித்தனத்திற்கும் அசாத்திய திறமைக்கும் சான்றாக அமைந்துள்ளது எனப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

पैसा गिनने की ये ट्रिक्स आपके बहुत काम आ सकती है pic.twitter.com/IuBhMTUSJY

— Viranshi Yadav (@Viranshi_Yadav_) June 17, 2026

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வரும் நிலையில், இணையவாசிகள் தங்களின் கலவையான கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். இந்தத் திறமையான உத்தியைப் பார்த்துப் பலரும் வியந்தாலும், பெரும்பாலானோர் தங்களின் எதார்த்தமான சூழ்நிலையை நகைச்சுவையாகக் கமெண்ட் செய்து வருகின்றனர். “யோசனை என்னவோ அருமையாக இருக்கிறது… ஆனால், இந்த அளவுக்கு அடுக்கடுக்காக வைத்து எண்ணிப் பார்க்க எங்களிடம் பணமே இல்லையே!” என்றும், “இவ்வளவு நோட்டுகளை நாங்கள் கனவில் மட்டும்தான் பார்க்க முடியும்” என்றும் நெட்டிசன்கள் கலகலப்பாகப் பதிவிட்டு, இந்த வீடியோவை மேலும் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.