முதன்முறையாக இந்தியாவின் மும்பை மெட்ரோ ரயிலில் பயணம் செய்த அமெரிக்க இளம் பெண் ஒருவர், நம் நாட்டின் உள்கட்டமைப்பைப் பார்த்து வியந்து பாராட்டியுள்ளார்.

தனது சொந்த ஊரான நியூயார்க்கில் உள்ள அழுக்கடைந்த சப்வே (Subway) ரயில்களுடன் ஒப்பிட்டுப் பேசியுள்ள அவர், மும்பை மெட்ரோவின் அசாத்தியமான தூய்மை, உலகத்தரம் வாய்ந்த பராமரிப்பு மற்றும் மிகக் குறைந்த பயணக் கட்டணம் ஆகியவற்றைக் கண்டு தான் வாயடைத்துப் போனதாகத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, மும்பை மெட்ரோவில் உள்ள பெண்களுக்கான தனிப் பெட்டி (Women’s Coach) வசதி அமெரிக்காவின் நியூயார்க்கிலேயே கிடையாது என அவர் ஆச்சரியப்பட்டுள்ளார்.

“பொதுப் போக்குவரத்தை எப்படித் திறம்பட நடத்த வேண்டும் என்பதை அமெரிக்கா, இந்தியாவிடமிருந்துதான் கற்றுக் கொள்ள வேண்டும்” என்று அந்தப் பெண் பெருமையுடன் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் தீயாகப் பரவி, இந்திய நெட்டிசன்களின் லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் வாரிக்குவித்து வருகிறது.