திருமணங்கள் என்றாலே கொண்டாட்டங்களுக்குப் பஞ்சம் இருக்காது. ஆனால், சில நேரங்களில் செய்யப்படும் குறும்புத்தனங்கள் ஒட்டுமொத்த கல்யாணக் களைகட்டலையும் காமெடியாக மாற்றிவிடும். அந்த வகையில், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், திருமண வைபவம் ஒன்றில் ஒரு இளம்பெண்ணை அங்கிருந்த இளைஞர்கள் ‘ஸ்னோ ஸ்ப்ரே’ (Snow Spray) கொண்டு முழுமையாக நனைத்துள்ளனர்.

அந்தப் பெண் தப்பிக்க முயன்ற போதிலும், விடாத அந்த வாலிபர்கள் அவர் மீது ஸ்ப்ரே மழையைப் பொழிந்ததால், தலை முதல் கால் வரை வெள்ளை நிற நுரை படிந்து அவர் பார்ப்பதற்கே ஒரு ‘பனி மனிதன்’ அல்லது ‘பேய்’ உருவம் போல மாறியது அங்கிருந்தோரைச் சிரிக்க வைத்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by irfan (@irfan_reza2.0)

இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வேடிக்கையான வீடியோவை இதுவரை 6.2 கோடிக்கும் (62 Million) அதிகமானோர் பார்த்துள்ளனர். சுமார் 10 லட்சம் பேர் இந்த வீடியோவை லைக் செய்துள்ள நிலையில், கமெண்ட் பகுதியில் விவாதங்களும் அனல் பறக்கின்றன.

“அந்தப் பெண்ணின் பல மணிநேர மேக்கப்பை ஒரே நொடியில் காலி செய்துவிட்டார்களே!” எனச் சிலர் வேடிக்கையாகக் கூறினாலும், “விளையாட்டு ஒரு எல்லைக்குள் இருக்க வேண்டும்;

இது அந்தப் பெண்ணுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியிருக்கலாம்” எனச் சிலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். எது எப்படியோ, இந்த வருடத்தின் மிகவும் ‘ஃபன்னியான’ திருமணத் தருணங்களில் ஒன்றாக இது வைரலாகி வருகிறது.