அதிவேகம் எப்போதும் ஆபத்தானது என்பதற்குச் சாட்சியாக ஒரு பயங்கர விபத்து வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், சாலையில் முன்னால் வந்த ஒரு கார் மெதுவாகத் திரும்ப முயல்கிறது.
அப்போது அந்த வழியாக மின்னல் வேகத்தில் வந்த ஒரு பைக், சற்றும் எதிர்பார்க்காத வகையில் கார் மீது பலமாக மோதியது. மோதிய வேகத்தில் பைக் ஓட்டுநர் அந்தரத்தில் பல அடி தூரம் தூக்கி வீசப்பட்டு, அருகில் இருந்த நீர்நிலையில் போய் விழுந்தார். இந்த விபத்தில் காரின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது அங்கிருந்தவர்களை உறைந்து போகச் செய்துள்ளது.
Where is the biker 😯😯😯 pic.twitter.com/IVndmwdEHm
— Venkey⋆Reacts (@VenkeyReacts) December 20, 2025
சுமார் 20 வினாடிகள் மட்டுமே ஓடும் இந்த விபத்து காட்சியை 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எக்ஸ் (X) தளத்தில் பார்த்துள்ளனர். காரில் இருந்தவர்களுக்குப் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை என்றாலும், பைக்கில் வந்தவரின் நிலை என்னவானது என்பது குறித்த கவலைகளை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.
“சாலையில் செல்லும் போது வேகத்தைக் குறைப்பதும், மற்ற வாகனங்களைக் கவனிப்பதும் எவ்வளவு முக்கியம் என்பதற்கு இந்த விபத்தே ஒரு பாடம்” எனப் பலரும் பதிவிட்டு வருகின்றனர். ஒரு சிறு கவனக்குறைவு எப்படி ஒருவரின் வாழ்க்கையைத் தலைகீழாக மாற்றும் என்பதை இந்த வீடியோ மீண்டும் ஒருமுறை எச்சரித்துள்ளது.
