அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளையின் நன்கொடையில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, கோவில் நிர்வாகத்தில் பெரும் அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ளது. பொது அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத்ராய் மற்றும் அறங்காவலர் அனில் மிஸ்ரா ஆகிய இருவரும் தங்களது பதவிகளை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளனர்.

இந்த முறைகேடு விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக சிறப்பு விசாரணைக்குழு (SIT) அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், இந்த மோசடியில் தொடர்புடைய முக்கியப் புள்ளிகள் உட்பட மொத்தம் 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவில் வளாகம் மற்றும் அலுவலகங்களில் இருந்த சிசிடிவி (CCTV) காட்சிகளை அக்குவேறு ஆணிவேறாக ஆய்வு செய்த சிறப்பு விசாரணைக்குழு, அதில் கிடைத்த பக்காவான ஆதாரங்களின் அடிப்படையில் தற்போது 6 பேரை அதிரடியாகக் கைது செய்துள்ளது. இந்த அதிரடி கைதுகளால் அயோத்தி விவகாரம் இப்போது மீண்டும் நாடு தழுவிய அளவில் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது!