மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர் ஒருவர், பள்ளிக்குக் குடித்துவிட்டு வருவதோடு, சிறு வயது மாணவர்களையே தனக்கு மது பாட்டில் வாங்கி வர அனுப்பியதாக எழுந்த குற்றச்சாட்டு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத் கிராமத்தில் இயங்கும் இந்தப் பள்ளியின் ஆசிரியர் பகவண்டாஸ் அஹிர்வார், மாணவர்களுக்குப் பாடம் நடத்துவதற்குப் பதிலாக, அருகில் உள்ள மதுக்கடைக்குச் சென்று தனக்கு மதுபானம் வாங்கி வருமாறு சிறுவர்களைப் பயன்படுத்தியதாக கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மாணவர்கள் தங்கள் சட்டைப்பையில் மது பாட்டிலை வைத்துக்கொண்டு, ‘மாசாப்’ (ஆசிரியர்) என்பவருக்காக இதை எடுத்துச் செல்வதாகக் கூறும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகப் பரவி வருகிறது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், சிறார்களுக்கு மது வழக்கம் கற்றுக்கொடுக்கப்படும் விவகாரம் குறித்துக் கடும் கவலை தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, இந்த வீடியோவைப் பதிவு செய்த நபருக்கு ஆசிரியரின் மனைவி தொலைபேசியில் துப்பாக்கியால் சுட்டுவிடுவதாக மிரட்டல் விடுத்த ஆடியோ பதிவும் வெளியாகி பரபரப்பைக் கூட்டியுள்ளது. இருப்பினும், இந்த ஆடியோவின் உண்மைத்தன்மை இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
#WATCH | 'Bhagwan Das Ne Mangwayi…': Govt School Student Exposes Teacher Sent Him To Buy Liquor In Chhatarpur #MPnews #MadhyaPradesh #MPschool pic.twitter.com/3mjWt6EgQ2 — Free Press Madhya Pradesh (@FreePressMP) August 17, 2026 “>
இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய மாவட்டக் கல்வி அதிகாரி பி.கே. ராய்க்வார், புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு, குற்றச்சாட்டுகள் உண்மையென நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
