ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ரோட்டில், காதலியுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற கணவனை அவரது மனைவி நடுரோட்டில் வைத்து சரமாரியாகத் தாக்கிய அதிரடி சம்பவம் தற்பொழுது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தனது கணவன் கள்ளக்காதல் விவகாரத்தில் ஈடுபட்டிருப்பதைச் சந்தேகம்பட்ட மனைவி, புதன்கிழமை அதிகாலை முதலே அவரைத் ரகசியமாகப் பின் தொடர்ந்து கண்காணித்துள்ளார். கணவன் தனது காதலியை பைக்கில் ஏற்றிய அடுத்த கணமே, சிங்கப் பெண்ணாகப் பாய்ந்த மனைவி பைக்கை வழிமறித்து, அந்தப் பெண்ணின் தலைமுடியைப் பிடித்து இழுத்து நடுரோட்டில் வச்சு கன்னத்தில் அறைந்துள்ளார்; இதனைத் தடுக்க வந்த கணவரையும் மனைவி, பொதுமக்கள் முன்னிலையிலேயே அடித்து வெளுத்துள்ளார்.

“இவன் தினமும் என்னை வீட்டில் வைத்து அடிக்கிறான், இன்று இவனை சும்மா விடமாட்டேன், அடிக்க எனக்கு ஒரு செருப்பு கொடுங்கள்” என்று அந்த மனைவி ஆக்ரோஷமாகக் கத்தியதும், அங்கிருந்த பொதுமக்கள் “முதலில் அந்தப் பெண்ணை விடுங்கள், உங்கள் கணவனை நன்றாக வெளுத்து வாங்குங்கள்” என அவருக்கு ஆதரவாகக் குரல் எழுப்பினர்.

 

“>

இந்த காட்சிகளை அங்கிருந்த நெட்டிசன்களின் மொபைல் கேமராவில் பதிவாகி எக்ஸ் தளம் உள்ளிட்ட சோசியல் மீடியாக்களில் தீயாய் பரவி வருகிறது.