தமிழக மக்களின் வசதிக்காக வாங்கப்பட்டுள்ள புதிய அரசுப் பேருந்துகளைத் தமிழக முதலமைச்சர் கொடியசைத்துத் தொடங்கி வைத்ததுடன், அவரே அந்தப் பேருந்துக்குள் பயணித்துத் தனது கைப்பேசியில் எடுத்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வெளியாகி பரவி வருகிறது .

பேருந்துகளைத் தொடங்கி வைத்த கையோடு திடீரென அதற்குள் ஏறிய முதலமைச்சர், மெரினா கடற்கரை வரை ஒரு சாதாரணப் பயணியைப் போலப் பயணித்து, நடத்துனரிடம் கச்சிதமாகப் பணம் கொடுத்துத் டிக்கெட் வாங்கிய  எளிமை அங்கிருந்தோரை வியப்பில் ஆழ்த்தியது.

 

View this post on Instagram

 

A post shared by 🔥 Voice of Tvk 🔥 (@kalidass.tvk.pkk)

“>

அதுமட்டுமன்றி, அவரே கேமராமேனாக மாறித் தன் கைப்பேசி மூலம் எடுத்த அந்த நெகிழ்ச்சியான பயண நிமிடங்கள் தற்பொழுது எக்ஸ் தளம் உள்ளிட்ட சோசியல் மீடியாக்களில் லட்சக்கணக்கானோரால் வெகுவாகப் பகிரப்பட்டு, வலம் வந்து கொண்டிருக்கிறது.