கர்நாடக மாநிலம் பாகல்கோட்டில் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகள் பள்ளியில், 16 வயது சிறுவன் ஒருவன் பள்ளி தாளாளரால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பள்ளியின் தாளாளர் அக்ஷய் என்பவர், சிறுவன் கீழே விழுந்து கதறியும் இரக்கமின்றி பிளாஸ்டிக் பைப்பால் சரமாரியாகத் தாக்கியுள்ளார். அதைவிடக் கொடுமையாக, அவரது மனைவி ஆனந்தி என்பவர் வீட்டிற்குள் இருந்து மிளகாய்ப் பொடியைக் கொண்டு வந்து அந்த மாற்றுத்திறனாளி சிறுவனின் கண்களில் தூவியுள்ளார்.

​இந்தக் கொடூரமான செயலை அங்கிருந்த ஒருவர் ரகசியமாக வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதை அடுத்து, அந்த வீடியோ வைரலாகி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். தற்போது பள்ளி தாளாளர் அக்ஷய், அவரது மனைவி மற்றும் உதவியாளர்கள் என நான்கு பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.