தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை, சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் பிரபல ஊடகவியலாளர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு இன்று (டிசம்பர் 21) நேரில் சந்தித்தார். அப்போது அவர் தன்னை தவெக-வில் அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொண்டார். அவருக்குக் கட்சியின் தேசிய பத்திரிகை செய்தித் தொடர்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அதிமுக-வின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் JCT பிரபாகரனின் மகன் அமலனும் சற்றுமுன் தவெக-வில் இணைந்தார்.

​அமலனை நேரில் வரவேற்ற விஜய், அவருக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் துண்டை அணிவித்து உற்சாகமாக வரவேற்றார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. ஒரே நாளில் ஊடகத் துறையிலிருந்தும், அரசியல் வாரிசு ஒருவரும் விஜய்யின் கட்சியில் இணைந்திருப்பது தவெக-வின் பலத்தை அதிகரித்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.