தமிழக வெற்றிக் கழகத்தில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய அரசியல் பிரபலங்கள் அடுத்தடுத்து இணைந்து வருகின்றனர். அந்த வரிசையில், பிரபல யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு தவெக தலைவர் விஜய் முன்னிலையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார். அவர் கட்சியில் இணைந்த சில நிமிடங்களிலேயே, அவருக்கு “தேசிய பத்திரிகை செய்தித் தொடர்பாளர்” என்ற முக்கியப் பொறுப்பை விஜய் வழங்கி கௌரவித்துள்ளார்.

​ஊடகத்துறையில் நீண்ட அனுபவம் கொண்ட ஃபெலிக்ஸ் ஜெரால்டு, கட்சியின் கொள்கைகளையும் செய்திகளையும் தேசிய அளவில் கொண்டு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரை வரவேற்ற விஜய், எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணிகளில் இப்போதே முழுவீச்சில் ஈடுபடுமாறு அறிவுறுத்தியுள்ளார். தவெக-வின் ஊடகப் பிரிவு இனி ஃபெலிக்ஸ் தலைமையில் இன்னும் வலுவடையும் என்று அக்கட்சித் தொண்டர்கள் கருதுகின்றனர்.