மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வா மாவட்டத்தில் உள்ள ஒரு மசூதியில், தொழுகைக்காகக் காத்திருந்த 56 வயது நபர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜமா மசூதி கமிட்டி உறுப்பினரான ஹாஜி ஷேக் அலிம் என்பவர், இரவு தொழுகைக்காக மசூதிக்கு வந்துவிட்டு, அங்கிருந்த ‘வுஜு’ (ஒழு) செய்யும் இடத்தில் அமர்ந்து பாங்கு ஓதி முடிப்பதற்காகக் காத்திருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மயங்கி விழுந்தார்.
அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர், ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சுமார் 20 ஆண்டுகளாக மசூதி மற்றும் சமூகப் பணிகளில் ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்த அவரது இந்த திடீர் மறைவு, அந்தப் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் மசூதியில் மயங்கி விழும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
