மீரட்டில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில், குடிபோதையில் இருந்த வார்டு பாய் ஒருவர், நான்கு வயது சிறுவனின் நெபுலைசரில் (ஆவி பிடிக்கும் கருவி) தவறுதலாக ஸ்பிரிட்டை நிரப்ப முயன்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. நல்லவேளையாக, அங்கிருந்த மற்ற ஊழியர்கள் இதனைச் சரியான நேரத்தில் கவனித்து தடுத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. ஏற்கனவே பணியில் கவனக்குறைவாக இருந்த அந்த ஊழியர், தற்போது உடனடியாக வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

​இதே மருத்துவமனையில் கடந்த வாரம் ஆதரவற்ற பெண் ஒருவரை ஊழியர்கள் தாக்கிய மற்றொரு கொடுமையான சம்பவமும் நடந்துள்ளது. இதுபோன்ற அநாகரீகமான செயல்களில் ஈடுபடும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவமனை நிர்வாகம் எச்சரித்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர் புகார் அளிக்காததால், இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவல் துறையில் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.