உத்யோக் நகரி எக்ஸ்பிரஸ் ரயிலின் சமையலறையில் உணவுகள் மற்றும் கோதுமை மாவு மூடைகளுக்கு இடையே எலி ஒன்று உலா வரும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பயணிகள் மற்றும் உணவின் சுகாதாரம் குறித்த கேள்விகளையும் அச்சத்தையும் இந்த வீடியோ உருவாக்கியுள்ளது.
மும்பை லோக்மான்ய திலக் முனையத்தில் இருந்து உத்தரப்பிரதேசத்தின் பிரதாப்கர் வரை இயங்கும் இந்த ரயிலில், உணவு சமைத்து வழங்கும் சமையலறைப் பெட்டி இணைக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், உணவுப்பொருட்கள் இருக்கும் இடத்தில் எலி சுற்றித் திரியும் காட்சிகள் பயணிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரயில்களில் வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் தூய்மை குறித்துப் பயணிகள் தொடர்ந்து கவலை தெரிவித்து வரும் நிலையில், இந்த வீடியோ இரயில்வே நிர்வாகத்தின் சுகாதாரப் பராமரிப்பு முறையைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இதுகுறித்து முறையிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ காட்சிகளின் உண்மைத்தன்மையை உடனடியாக ஆய்வு செய்து, முறையான விசாரணை நடத்தித் தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.
A viral video showing a rat inside the pantry of the 12173 Udyog Nagri Express, near food items and flour, has raised serious concerns over passenger hygiene and food safety.
The train runs from Lokmanya Tilak Terminus to Pratapgarh and has a pantry car. Authorities have been… pic.twitter.com/EhLndYhacz
— Mid Day (@mid_day) August 11, 2026
“>
ரயில் பயணங்களின் போது வழங்கப்படும் உணவின் சுகாதாரத்தை உறுதி செய்ய வேண்டியது மிக அவசியம். எனவே, இதுபோன்ற சம்பவங்கள் இனி வருங்காலங்களில் மீண்டும் நடக்காமல் இருக்க, இரயில்வே நிர்வாகம் சமையலறைப் பெட்டிகளை எப்போதும் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கை மக்களிடையே வலுத்து வருகிறது.
