சீனாவில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சி சமூக வலைத்தளமான எக்ஸ்-இல் வைரலாகி வருகிறது. அதில், ஒரு பெண் நின்று கொண்டிருக்கும்போது, அவருக்குத் தெரியாமல் ஒரு நபர் பின்னால் வந்து அவரது ஆடைக்குள் அநாகரிகமான முறையில் பார்க்க முயற்சிக்கும் அதிர்ச்சிகரமான காட்சி பதிவாகியுள்ளது. இந்தப் பதிவின் கீழ், சீனாவில் ஆண்களின் எண்ணிக்கை பெண்களை விட அதிகமாக இருப்பதாலேயே இதுபோன்ற அநாகரிகமான செயல்கள் நடப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
China also has the highest number of incels in the world.
This is because they aborted female fetuses and only gave birth to boys.
Now there are no women available for anyone. 😳
That's why their men have started to behave in this way. 🤡 https://t.co/BHX495jLsI pic.twitter.com/dkSsrVhwqw
— Pseudo Prophet (@Pseudo_Prophet_) December 20, 2025
முன்னதாக சீனாவில் கடைபிடிக்கப்பட்ட ‘ஒரு குழந்தை’ கொள்கை மற்றும் ஆண் குழந்தைகளுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்ட காரணத்தால், அங்கு பாலின விகிதத்தில் பெரும் இடைவெளி ஏற்பட்டுள்ளது. இதனால் பல ஆண்களுக்குத் திருமண உறவு கிடைப்பதில் சிக்கல் உள்ளதாகவும், அந்த விரக்தியே இதுபோன்ற கீழ்த்தரமான மனநிலைக்குக் காரணம் என்றும் அந்தப் பதிவில் விமர்சிக்கப்பட்டுள்ளது.
