கரூரில் நடந்த கூட்ட நெரிசல் விவகாரத்தை திமுகவினர் மிகக் கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், தற்போது அதே போன்றதொரு சம்பவம் திமுக நிகழ்ச்சியிலேயே நடந்திருப்பது பெரும் பேசுபொருளாகியுள்ளது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு, ராணிப்பேட்டையில் அமைச்சர் காந்தி தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்றவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன.

 

View this post on Instagram

 

A post shared by Puthiya Thalaimurai Tv (@puthiyathalaimurai)

“>

​அப்போது பொருட்களைப் பெறுவதற்காக திமுகவினர் மற்றும் பொதுமக்கள் திடீரென முண்டியடித்ததால் அந்த இடமே போர்க்களமாக மாறியது. இந்த எதிர்பாராத கூட்ட நெரிசலில் சிக்கி பலர் காயமடைந்தனர். மேலும், இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள், கூட்டத்தில் இருந்த சிலரது செல்போன்கள் மற்றும் பணப்பைகளைத் திருடிச் சென்றனர். விமர்சனம் செய்தவர்களே அதே போன்றதொரு சூழலில் சிக்கியிருப்பது சமூக வலைத்தளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

“>