தமிழக வெற்றி கழகத்தில் சமீபத்தில் மூத்த அரசியல்வாதியும் அதிமுகவின் முன்னாள் அமைச்சருயமான செங்கோட்டைய இணைந்தார். எம்ஜிஆர் காலத்தில் அதாவது தன்னுடைய 20 வயதில் அரசியலில் சேர்ந்த செங்கோட்டையன் ஈரோடு மாவட்டம் கோபி தொகுதியில் 9 முறையும் எம்எல்ஏவாக இருந்துள்ளார்.

இவர் அதிமுகவில் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என கூறிய நிலையில் அதற்காக எடப்பாடி பழனிச்சாமிக்கு கெடு விதித்ததால் எடப்பாடி பழனிச்சாமி அவரை கட்சியிலிருந்து நீக்கினார். இதனைத் தொடர்ந்து தன்னுடைய கோபி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன் தன் ஆதரவாளர்களுடன் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.

அவருக்கு தமிழக வெற்றி கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் செங்கோட்டையனுக்கு எதிராக தற்போது அதிமுக அவரது அண்ணன் மகனான கேகே செல்வத்தை களமிறங்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. திமுகவிலிருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட அவர் அதிமுகவில பின்னர் இணைந்தார்.

மேலும் இந்த நிலையில் தற்போது அதிமுக சார்பில் போட்டியிட கேகே செல்வம் விருப்ப மனு தெரிவித்துள்ளார். ஏற்கனவே அவர் செங்கோட்டையனை தோற்கடிப்பேன் என்று கூறிய நிலையில் தற்போது தன்னுடைய அண்ணன் மகனே அவருக்கு எதிராக நிற்பது செங்கோட்டையனுக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.