அதிமுகவின் மூத்த தலைவரும், அக்கட்சியின் அவைத்தலைவருமான தமிழ்மகன் உசேன் (வயது 89), கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று (டிசம்பர் 20) சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயது முதிர்வு மற்றும் சோர்வு காரணமாக அவர் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்து வந்த நிலையில், தற்போது அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
கட்சியின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவரான தமிழ்மகன் உசேன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் அறிந்து அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கவலையடைந்துள்ளனர். அவர் விரைவில் முழு உடல்நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கட்சியின் முக்கிய தலைவர்களும், தொண்டர்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
