கேரள மாநிலம் வாளையார் பகுதியில் உணவுப் பொட்டலத்தைத் திருடியதாகக் கூறி, சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 45 வயது புலம்பெயர் தொழிலாளி ராம் நாராயண் என்பவரை ஒரு கும்பல் அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வியாழக்கிழமை இரவு நடைபெற்ற இந்தத் தாக்குதலில், உணவுப் பொட்டலம் ஏதேனும் வைத்துள்ளாரா என்று சோதனையிட்டபோது அவரிடம் எதுவும் இல்லை என்பது தெரியவந்த நிலையில் கும்பலால் கடுமையாகத் தாக்கப்பட்டு  மயங்கி விழுந்த அவரை, போலீஸார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்; எனினும் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக வாளையார் போலீஸார் 5 பேரைக் கைது செய்துள்ளதோடு, 10-க்கும் மேற்பட்டோரைப் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.