பெங்களூரில் மகாடி பகுதியை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவியை காதலிப்பது போல் ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பிய விவகாரத்தில் விகாஸ் (25), பிரசாந்த் (19) மற்றும் சேத்தன் (28) ஆகிய மூன்று இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருமண ஆசை காட்டி மாணவியை முதலில் வன்கொடுமை செய்த விகாஸ், அதனை ரகசியமாக தனது கைப்பேசியில் படம் பிடித்து வைத்துக்கொண்டு, பின்னர் அந்த வீடியோவை காட்டி மிரட்டி தனது நண்பர்களுடன் சேர்ந்து மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த கொடூரச் செயலை வீடியோவாகப் பதிவு செய்து இன்ஸ்டாகிராம் வாயிலாக மாணவிக்கே அனுப்பி மிரட்டியுள்ளனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், குற்றவாளிகள் மூவரையும் கைது செய்து அவர்களது கைப்பேசிகளையும் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
