அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் உள்ள அலெக்சாண்டர் உயர்நிலைப் பள்ளியில், உயிரியல் ஆசிரியையாகப் பணிபுரிந்து வந்த 25 வயது மாரிஸ் நிக்கோல்ஸ் என்பவரின் செயல்களும், அதன் தொடர்ச்சியாக அரங்கேறிய பிளாக்மெயில் சம்பவமும் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி கால்பந்து அணியின் மேலாளராகவும் இருந்த இந்த ஆசிரியை, கடந்த மே மாதம் மைனர் மாணவர் ஒருவருடன் இரண்டு முறை உடலுறவு கொண்ட குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்.

ஏப்ரல் 23 அன்று பள்ளியின் அலமாரி  ஒன்றிலும், மே 2 அன்று ஒரு காரிலும் இந்த அவதூறான செயல்கள் நடந்துள்ளது விசாரணையில் உறுதியானது. தற்போது இந்த வழக்கில் ஜாமீனில் இருக்கும் மாரிஸ் நிக்கோல்ஸ், தனது சொந்த மகளைத் தவிர மற்ற எந்தவொரு மைனர் குழந்தைகளையும் தொடர்பு கொள்ளக் கூடாது என்ற கடுமையான நீதிமன்ற நிபந்தனைகளுடன் வெளியில் உள்ளார்.

இந்நிலையில், இந்த வழக்கில் போலீசாரையே சுழற்றப்போட்ட ஒரு புதிய விபரீத ட்விஸ்ட் தற்போது வெளிவந்துள்ளது. கைது செய்யப்படுவதற்கு முந்தைய நாளான மே 3 அன்று, மாரிஸ் மற்றொரு மாணவருடனும் உடலுறவு கொண்டுள்ளார். மேலும், பல மாணவர்களுக்குத் தனது ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பியுள்ளார். இதில் ஒரு மாணவருடன் அவர் இருந்த வீடியோ பள்ளி முழுவதும் வேகமாகப் பரவியுள்ளது. மாரிஸ் நிக்கோல்ஸின் ‘ஒன்லிபேன்ஸ்’ (OnlyFans) சமூக வலைத்தள கணக்கையும், இந்த ரகசிய வீடியோவையும் கையில் எடுத்த பள்ளி மாணவர்கள் சிலர், அதை இணையத்தில் கசியவிட்டுவிடுவோம் என ஆசிரியை மாரிஸையே மிரட்டத் தொடங்கியுள்ளனர்.

ஆனால், அவர்கள் ஆசிரியையிடம் பணம் கேட்கவில்லை; மாறாக “தேர்வில் தங்களுக்கு அதிக மதிப்பெண்கள் வழங்க வேண்டும்” என்று நூதனமாக பிளாக்மெயில் செய்துள்ளனர். இந்த வழக்கில் ஆதாரங்களை அழித்தல், குழந்தை துஷ்பிரயோகம் உள்ளிட்ட பிரிவுகளில் ஆசிரியை மீது வழக்கு பாய்ந்துள்ள நிலையில், இதுவரை 27 தேடுதல் வாரண்ட்டுகளைப் பிறப்பித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.