அமெரிக்காவின் நியூயார்க் நகரத் தெருக்களில் சமீபத்தில் மனிதர்களின் தலைமுடியால் மட்டுமே உருவாக்கப்பட்ட பிரம்மாண்டமான பந்து ஒன்று உருட்டிச் செல்லப்பட்ட விசித்திரமான சம்பவம் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த விசித்திரப் பந்தைப் பார்த்த பாதசாரிகளும் வாகன ஓட்டிகளும் பெரும் ஆச்சரியத்துடன் அதை வியந்து பார்த்தனர்.

சுமார் 68 கிலோ எடையும், 10 அடி உயரமும் கொண்ட இந்த மாபெரும் முடிப் பந்தை நியூயார்க்கின் முக்கியச் சாலைகளில் மக்கள் கூட்டத்திற்கு இடையே கவனமாக உருட்டிச் சென்றனர். இதைப் பார்த்த பொதுமக்கள் பலரும் இது என்ன விதமான விளம்பரம் அல்லது விழிப்புணர்வு என்று ஆர்வத்துடன் தங்களது மொபைல் போன்களில் படம் பிடித்தனர்.

இன்றைய நவீன காலத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலரிடையேயும் மிகக் தீவிரமாக அதிகரித்து வரும் தலைமுடி கொட்டுதல் மற்றும் முடி மெலிதாகுதல் பிரச்சினை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே இந்த வித்தியாசமான முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இந்த விழிப்புணர்வுப் பேரணியை பிரபல ‘K18’ கூந்தல் பராமரிப்பு நிறுவனமும், ‘அன்காமன் கிரியேட்டிவ் ஸ்டுடியோ’ என்ற விளம்பர நிறுவனமும் இணைந்து மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தன. தலைமுடி ஆரோக்கியம் மற்றும் சரியான பராமரிப்பின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

“>

சாதாரண விளம்பரப் பேனர்களுக்குப் பதிலாக, மனிதர்களின் உதிர்ந்த முடியைக் கொண்டே இவ்வளவு பெரிய பந்தை உருவாக்கித் தெருக்களில் கொண்டு சென்ற இந்த வித்தியாசமான யோசனை, சமூக வலைதளங்களிலும் தற்போது பெரும் விவாதப் பொருளாகி வைரலாகி வருகிறது.