தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் நிறுவனத் தலைவரான முஸ்தபா, சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் விசிக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான விஜய்யால் மதுரை மாநகர மத்திய மாவட்ட இளைஞரணிச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருக்கும் நபர், மற்றொரு கட்சியின் மாவட்டப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ள விவகாரம் தமிழக அரசியல் வரலாற்றில் இதுவே முதன்முறையாகும். இந்த அதிரடி அரசியல் நகர்வு மாநிலம் முழுவதும் உள்ள அரசியல் கட்சியினரிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் மதுரையில் முத்திரை பதித்த முஸ்தபாவிற்கு, தவெக தரப்பில் முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது அக்கட்சியின் அமைப்பை அடிமட்ட அளவில் பலப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்ட வியூகமாகப் பார்க்கப்படுகிறது.

“>

 

தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளின் கூட்டணிக் கணக்குகளையும் தாண்டி, தனித்துவமான அரசியல் மாற்றங்களை நோக்கித் தமிழக வெற்றிக் கழகம் நகர்ந்து வருவதை இந்த நியமனம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.