மெக்சிகோவில் புதிய ரயில் பாதை தொடக்க விழாவின் போது, அந்நாட்டின் மேயர் தற்செயலாக தாமதமாக வந்துள்ளார். அவர் வருவதற்கு முன்னரே ரயில் கிளம்பிவிட்டதால், அதை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என்ற ஆதங்கத்தில் அவர் ரயில் நிலைய மேடையில் ஓடி வரும் காட்சிகள் தற்போது எக்ஸ் (X) தளத்தில் வைரலாகி வருகிறது. இந்தப் பதிவைப் பகிர்ந்துள்ள பலரும் இந்தியச் சூழலோடு ஒப்பிட்டு விமர்சித்து வருகின்றனர்.
A Mayor in Mexico, was late for the inauguration of the new train line and couldnt be part of the first trip.
In India the train driver would have been arrested for not waiting for the minister 😭🤡pic.twitter.com/G5s7HtbHQG
— 🚨Indian Gems (@IndianGems_) December 21, 2025
இந்தியாவில் இது போன்ற ஒரு சம்பவம் நடந்திருந்தால், அமைச்சருக்காகக் காத்திருக்காமல் ரயிலை இயக்கியதற்காக ஓட்டுநர் உடனடியாகக் கைது செய்யப்பட்டிருப்பார் அல்லது பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பார் எனக் குறிப்பிட்டு, மெக்சிகோ நாட்டின் நேர மேலாண்மையையும் சட்ட ஒழுங்கையும் நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
