பாம்பு என்ற பெயரைச் கேட்டாலே எப்பேர்ப்பட்ட வீரனுக்கும் உடல் நடுங்கும்; கை கால்களில் வேர்க்கத் தொடங்கிவிடும். பெரிய பெரிய ஆட்களே பாம்பைக் கண்டால் பல அடி தூரம் தள்ளிப்போக யோசிக்கும் வேளையில், சிறுமிகள் சிலர் பாம்பைக் கயிற்றைப் போல் பிடித்து விளையாடினால் எப்படி இருக்கும்? சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ, நெட்டிசன்களை உரைய வைத்துள்ளது.
அந்த வீடியோவில், சாலையோரப் புல்வெளியில் ‘காப்பர் ஹெட் ரேசர்’ வகை பாம்பு ஒன்று படுத்துக் கிடக்கிறது. இந்த வகையான பாம்புகள் மிகவும் ஆக்ரோஷமானவை; எதிரிகளை வேகமாகத் தாக்கும் இயல்பு கொண்டவை. ஆனால், இதைப் பற்றி ஏதும் அறியாத ஒரு சிறுமி, அந்தப் பாம்பை சாதாரண கயிறு போல கையில் பிடிக்க முயல்கிறார். சிறுமி தொட்ட அடுத்த நொடியே பாம்பு கோபத்துடன் சீறிப் பாய்ந்து தாக்குகிறது. சிறுமி அலறி அடித்து பின்வாங்குகிறார். ஆனாலும் அச்சமின்றி மீண்டும் மீண்டும் சென்று அந்தப் பாம்பைத் தொட்டு விளையாடுகிறார்.
View this post on Instagram
இந்தச் சம்பவத்தில் மிகவும் அதிர்ச்சியளிக்கும் விஷயம் என்னவென்றால், அந்தச் சிறுமிகளுடன் இரண்டு பெரியவர்கள் கேமராவுடன் இருந்துள்ளனர். ஆபத்தான இந்த விளையாட்டைத் தடுத்து நிறுத்தாமல், வீடியோ எடுப்பதற்காகச் சிறுமிகளை அவர்கள் மேலும் ஊக்குவித்துள்ளனர். இந்த ‘காப்பர் ஹெட் ரேசர்’ பாம்புகளில் விஷம் இல்லை என்றாலும், அவை கடித்தால் ஆழமான காயம் ஏற்பட்டு அதிகளவில் ரத்தம் வெளியேறும். இதனால் உயிருக்கு ஆபத்து ஏற்படாவிட்டாலும், உடலுக்குப் பெரிய அளவிலான பாதிப்புகள் உண்டாக வாய்ப்புள்ளது.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர். கேமரா லைக்குகளுக்காகச் சிறுமிகளின் உயிரோடு விளையாடும் பெரியவர்களின் இந்தச் செயலுக்கு இணையவாசிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். “பாம்பு கடித்தால் வலி தாங்க முடியாது, குழந்தையைக் காப்பாற்றுங்கள்”, “ஒருவேளை இவர்கள் பாம்பு பிடிக்கும் குடும்பமாக இருக்கலாம், ஆனால் குழந்தைக்குப் பயிற்சி அளிக்கும் முறை முற்றிலும் தவறானது” என நெட்டிசன்கள் தங்களின் கொந்தளிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
