சமூக வலைத்தளங்களில் திரைப்பட படப்பிடிப்புகள் மற்றும் சாகசக் காட்சிகளின் போது நடக்கும் எதிர்பாராத வேடிக்கையான சம்பவங்கள் அடிக்கடி வைரலாவது வழக்கம். அந்த வகையில், ஒரு வீடியோ படப்பிடிப்பின் போது நடைபெற்ற ஒரு நகைச்சுவையான அசம்பாவிதம் தற்போது இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி வருகிறது.
சாகசக் காட்சி ஒன்றைச் படமாக்க முயன்ற போது நடந்த இந்தத் தர்மசங்கடமான சம்பவம் சமூக வலைத்தள பயனர்களிடையே வேகமாகப் பரவி வருகிறது. அந்தப் படப்பிடிப்பின் போது, ‘ஹீரோ’ கயிற்றில் தொங்கியபடி ஒரு சாகசக் காட்சியில் நடித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் அணிந்திருந்த பேன்ட், அவர் தொங்கிக்கொண்டிருந்த கயிற்றில் மாட்டிக் கொண்டது.
Shooting gone wrong!! 🤣🤣🤣 pic.twitter.com/Vtzygo0F1H
— कुंभकरण (@_kumbhkaran) July 17, 2026
“>
இதனால் அங்கிருந்த பொதுமக்கள் முன்னிலையிலேயே அவரது பேன்ட் கீழே இறங்கி, உள்ளாடை வெளியே தெரியத் தொடங்கியது. இதைப் பார்த்த அங்கிருந்த பார்வையாளர்கள் முதலில் என்ன செய்வதென்று தெரியாமல் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாகச் சில நபர்கள் அவருக்கு உதவ ஓடிவந்த நிலையில் அந்த வீடியோ பதிவு முடிகிறது.
இந்த வீடியோ X பக்கத்தில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, இணையத்தில் நெட்டிசன்களின் வேடிக்கையான கமெண்ட்டுகள் குவியத் தொடங்கின. “ஒரு மாஸ் ஆக்சன் காட்சி, நொடிப் பொழுதில் முழுமையான காமெடி காட்சியாக மாறிவிட்டது” என்றும், “போதும் நிறுத்துங்கள், எவ்வளவுதான் சிரிப்பது!” என்றும் பயனர்கள் கலாய்த்து கருத்து தெரிவித்து வருகின்றனர். சாகசமாகத் தொடங்கப்பட்ட ஒரு காட்சி, எதிர்பாராத தவற்றால் இணையத்தில் வைரல் நகைச்சுவை வீடியோவாக மாறியுள்ளது.
