“இதுதான் ரியல் எஜுகேஷன்!”.. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மாணவி.. பள்ளி முழுவதும் செய்த அசாத்திய காரியம்.. வீடியோவை பார்த்தால் கண்ணே கலங்கிடுச்சு..!!!

மனிதநேயம் இன்னும் உயிர்ப்புடன் தான் இருக்கிறது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சாட்சி. புற்றுநோய் பாதிப்பால் கீமோதெரபி சிகிச்சை எடுத்துக்கொண்ட ஒரு பள்ளி மாணவிக்கு, சிகிச்சை காரணமாகத் தலைமுடி முழுவதும் கொட்டியுள்ளது. இதனால் மனமுடைந்த அந்தச் சிறுமி, மற்றவர்களிடம் இருந்து தன்னைத்…

Read more

“ஹலோ மங்கி..!”.. குரங்கு கிட்ட போய் சீன் போட்டா இதுதான் நடக்கும்!… செல்பி எடுக்க போன பெண்ணுக்கு நேர்ந்த கதி.. வைரலாகும் அச்சுறுத்தும் வீடியோ..!!!

சோஷியல் மீடியாவில் லைக்ஸ் வாங்க வேண்டும் என்பதற்காகப் பலரும் விபரீத விளையாட்டுகளில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது. அந்த வரிசையில், குரங்குடன் செல்ஃபி எடுக்க முயன்ற இளம்பெண் ஒருவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வெளியான வீடியோவில், ஒரு குரங்கு…

Read more

“இவ்வளவு அவசரமா இன்ஜின்ல ஏற போய்?”… வந்தே பாரத் ரயிலடியில் சிக்கிய நபர்.. நொடியில் நிகழ்ந்த அதிசயம்… வைரலாகும் திக் திக் வீடியோ..!!

ஓடும் ரயிலைப் பிடிப்பது எவ்வளவு ஆபத்தானது என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி. கான்பூர் ரயில் நிலையத்தில் இருந்து வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் புறப்பட்டுக் கொண்டிருந்தபோது, நபர் ஒருவர் ரயிலின் இன்ஜின் கேபின் (Loco Pilot Cabin) வழியாக உள்ளே நுழைய முயன்றார்.…

Read more

“1 நிமிஷத்துல 1 கோடி அபேஸ்..!”… கல்யாண வீட்டில் சர்வர் டிரஸ்சில் வந்த பலே திருடன்… நொடியில் நடந்த பகீர் கொள்ளை.. வைரலாகும் திகைக்க வைக்கும் வீடியோ..!!!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் (Sterling Resort) நடைபெற்ற திருமண விழாவில் அரங்கேறிய இந்தக் கொள்ளை சம்பவம் ஒட்டுமொத்த நகரையும் அதிரவைத்துள்ளது. ஒரு பிரபல நகைக்கடை உரிமையாளரின் மகள் திருமணத்திற்கு முன்னதாக நடைபெறும் ‘ஷகுன்’ (Shagun) சடங்கின்…

Read more

“வெற்றியை விட உயிர் முக்கியம்!”..மெல்போர்ன் மைதானத்தில் மயங்கி விழுந்த சிறுமி.. நொடியில் பிரபல வீராங்கனை செய்த செயல்.. வைரலாகும் மனித நேயமான வீடியோ..!!

டென்னிஸ் உலகில் வெற்றிகளை விட மனிதாபிமானமே பெரிது என்பதைத் துருக்கி வீராங்கனை ஜெயினப் சோன்மேஸ் நிரூபித்துக் காட்டியுள்ளார். மெல்போர்னில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் முதல் சுற்றுப் போட்டியில், கடுமையான வெப்பம் காரணமாகப் பந்து எடுத்துத் தரும் சிறுமி  ஒருவர்…

Read more

“ரன்களை வாரி வழங்கினா இதுதான் நிலைமை!”..பாகிஸ்தான் உலகக் கோப்பை அணியில் அதிரடி மாற்றம்..சீனியர் வீரரின் கனவு காலி..!!!

2026 டி20 உலகக் கோப்பைக்கு அனைத்து அணிகளும் தயாராகி வரும் நிலையில், பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் மைக் ஹெசன் ஒரு அதிரடி முடிவை எடுக்கத் தயாராகி வருகிறார். பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஹாரிஸ் ரவுஃபை உலகக் கோப்பை…

Read more

“ஸ்போர்ட்ஸ் மேன கிரிமினல் மாதிரி நடத்துறாங்க!”.. ரயிலிலிருந்து நடுவழியில் இறக்கிவிடப்பட்ட இந்தியாவின் டாப் வீரர்கள்.. வைரலாகும் கொந்தளிப்பான வீடியோ..!!!

சர்வதேச அளவில் இந்தியாவின் பெயரை உயர்த்திய தடகள வீரர்களுக்கு, நம் நாட்டு ரயிலிலேயே நேர்ந்த கசப்பான அனுபவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் முன்னணி போல் வால்ட் வீரர்களான தேவ் மீனா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர், பெங்களூருவில் இருந்து போபால்…

Read more

“சாப்பாடே இல்ல, ஆனா அக்கவுண்ட்ல 7 கோடி!”..ஏழைத் தொழிலாளிக்கு நோட்டீஸ் அனுப்பிய வருமான வரித்துறை…மெகாமோசடியின் பகீர் பின்னணி..!!!

உழைத்து ஓடாய்த் தேயும் ஒரு ஏழைத் தொழிலாளிக்கு கோடிக்கணக்கில் நோட்டீஸ் வந்தால் எப்படியிருக்கும்? அப்படித்தான் உபி-யில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஹர்தோய் மாவட்டத்தைச் சேர்ந்த கோவிந்த் என்ற கூலித் தொழிலாளிக்கு, வருமான வரித்துறை ரூ. 7.15 கோடி பணப்பரிமாற்றம் செய்துள்ளதாக அதிரடி…

Read more

“ராகுல்காந்தி கிட்ட கேள்வி கேட்கக் கூடாதா?”…இளைஞரிடம் மைக்கை பிடுங்கிய நிர்வாகிகள்…பொதுக்கூட்டத்தில் அரங்கேறிய பரபரப்பு…வைரல் வீடியோ..!!!

கேரள மாநிலம் கொச்சியில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற பேரணியில் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது கூட்டத்தில் இருந்த இளைஞர் ஒருவர், ராகுல் காந்தியிடம் கேள்வி கேட்க முன்வந்து மைக்கை வாங்கினார். “வங்காளம் (Bengal) ஏன் இவ்வளவு மோசமாகப் பின்தங்கியுள்ளது?” (Bengal itna…

Read more

“ஓடும் டிராக்டர் மீது ஒரே’ஜம்ப்!'”..சினிமாவை மிஞ்சிய ரியல் ஸ்டண்ட்..டிவைடரில் மோதிய டிராக்டர் டிரைவர்…வைரலாகும் பகீர் வீடியோ..!!!

ராஜஸ்தான் மாநிலம் பில்வாராவில் சட்டவிரோத மணல் கடத்தல் கும்பலைத் துரத்தியபோது, ஒரு போலீஸ்காரர் செய்த துணிச்சலான செயல் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மணல் கடத்திச் சென்ற டிராக்டரை நிறுத்த முயன்றபோது, டிரைவர் வண்டியை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றார். அப்போது,…

Read more

“கண்ணு முன்னாடியே துடிச்ச மக!”…மனஉளைச்சலால் ஓய்வு பெற்ற எஸ்.ஐயின் வெறிச்செயல்…விழுப்புரத்தில் பெரும் பரபரப்பு..!!!

விழுப்புரம் அருகே மகளின் தீராத நோயைக் கண்டு மனமுடைந்த தந்தை, மகளைக் கொன்று தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியையே உறைந்து போகச் செய்துள்ளது. கண்டமங்கலம் அடுத்த இந்திரா நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் கோதண்டராமன், ஆஸ்துமா…

Read more

“கதவைத் திறந்தா ஒரே ஷாக்!”..சிறுவனின் கைவரிசையில் சிக்கிய செல்லப் பிராணி…அந்த நாயோட முகத்தைப் பாருங்க!..வைரல் வீடியோ..!!!

வீடுகளில் சிறு குழந்தைகள் இருந்தால் அங்கே குறும்புத்தனங்களுக்குப் பஞ்சம் இருக்காது. அப்படி ஒரு சுட்டித்தனமான சிறுவன், தனது வீட்டு நாய்க்குச் செய்த ‘ஹேர் ஸ்டைல்’ இப்போது சோசியல் மீடியாவில் செம வைரல். தனது செல்ல நாயுடன் ஒரு அறையில் அந்தச் சிறுவன்…

Read more

“திருவிழாவில் நேர்ந்த பெரும் சோகம்!”..பலூன் சிலிண்டர் வெடித்து 3 பேர் உடல் சிதறி பலி…கள்ளக்குறிச்சியில் பதறவைக்கும் சம்பவம்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர் பேட்டையில் ஆற்றுத் திருவிழா கோலாகலமாக நடந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாகப் பலூனில் காற்று நிரப்பப் பயன்படும் கேஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இந்த கோர விபத்தில் சிக்கி 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.…

Read more

“இது என்ன புது கூத்தா இருக்கு?”… அரசு பேருந்தில் ஹிந்தி எழுத்துக்கள்.. கொதித்தெழுந்த தமிழ் ஆர்வலர்கள்.. தஞ்சாவூரில் பரபரப்பு..!!!

இந்தி திணிப்புக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் தமிழகத்தில், அரசுப் பேருந்து ஒன்றிலேயே இந்தி மொழி எழுத்துகள் இடம்பெற்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூரில் இயக்கப்பட்ட ஒரு புதிய அரசுப் பேருந்தின் உள்ளே பொருத்தப்பட்டிருந்த எல்.இ.டி (LED) திரையில் இந்தச்…

Read more

“பள்ளிக்குப் போன இடத்தில் இப்படியா ஆகணும்!”..லாரி மோதி 13 சிறுவர்கள் துடிதுடிக்கப் பலி…உலுக்கிய கோர விபத்து..நடந்தது என்ன?

தென்னாப்பிரிக்காவின் கவுடெங் (Gauteng) மாகாணத்தில் இன்று காலை நிகழ்ந்த கோர விபத்து ஒட்டுமொத்த உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஜோகன்னஸ்பர்க் நகரின் தென்மேற்குப் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் மினி பேருந்து, லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது. இன்று காலை…

Read more

“பிரேக் பிடிச்சா நிக்குமா? இல்ல டயர் கழண்டு ஓடுமா?”…மக்களின் உயிரோடு விளையாடும் திமுக அரசு…நயினார் நாகேந்திரன் காட்டம்..!!

தமிழக அரசுப் போக்குவரத்து கழகத்தில் இயக்கப்படும் பேருந்துகளின் தரம் குறித்து பாஜக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் பல பகுதிகளில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகள் மிகவும் பழுதடைந்த நிலையில் இருப்பதாகவும், இது பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை…

Read more

“பாஜகவின் புதிய தேசிய தலைவர் இவர்தான்!”…37 பேர் ஆதரவோடு மனுத்தாக்கல்…ஒருமனதாகத் தேர்வு…!!!

பாரதிய ஜனதா கட்சியின் புதிய தேசிய தலைவராக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நிதின் நபின் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் ஜே.பி. நட்டாவின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், கட்சியின் அடுத்த தலைவர் யார் என்ற பலத்த எதிர்பார்ப்புக்கு…

Read more

“இந்தியா வாரீங்களா?, இல்லையா?”..வங்கதேசத்துக்கு ஆப்பு வைத்த ஐசிசி…கிரிக்கெட் உலகில் வெடித்த புது சர்ச்சை…!!!

2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது. இதில் இந்தியாவில் விளையாட வேண்டிய “சி” பிரிவில் வங்கதேசம் இடம்பெற்றுள்ளது. ஆனால், பாதுகாப்பு காரணங்களைக் கூறி இந்தியா வர வங்கதேசம் முரண்டு பிடித்து வருவது இப்போது…

Read more

“பிஜேபி பண்றதுல தப்பில்லை,ஆனா முடிவெடுக்கிறது எடப்பாடியார் தான்!”…செல்லூர் ராஜூ கொடுத்த அதிரடி விளக்கம்..!!!

2026 தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. குறிப்பாக, அதிமுக – பாஜக கூட்டணியில் பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க பாஜக முயற்சி எடுத்து வருவதாகத் தகவல்கள் கசிந்து வருகின்றன. இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த செல்லூர்…

Read more

“மனுஷங்கதானா நீங்க?”..10 வயது சிறுமிக்கு நேர்ந்த நரக சித்திரவதை…சிஆர்பிஎஃப் வீரர் அட்டூழியம்…கொடூர சம்பவம்..!!!

நாட்டின் பாதுகாப்பிற்காகப் பணியாற்றும் ஒரு வீரரே, தனது வீட்டில் தங்கியிருந்த 10 வயது சிறுமியை இவ்வளவு கொடூரமாகத் சித்திரவதை செய்திருப்பது நாட்டையே உலுக்கியுள்ளது. கிரேட்டர் நொய்டாவில் உள்ள சிஆர்பிஎஃப் முகாமில் தங்கியிருந்த ஒரு வீரரும், அவரது மனைவியும் சேர்ந்து, மனைவியின் உடன்பிறந்தவர்…

Read more

“ஹோட்டல் பிசினஸ்னா நினைச்சா உள்ள நடக்கிறதே வேற!”.. அமெரிக்காவில் சர்வதேச குற்ற செயலில் சிக்கிய இந்திய தம்பதி.. வெளியான பகீர் லீலைகள்..!!

அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியில் உள்ள ஒரு மோட்டலை (Motel) குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்த இந்திய வம்சாவளி தம்பதி, அங்கு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது. ‘மாமா கே’ மற்றும் ‘பாப்’ என்று அழைக்கப்படும் இந்த தம்பதி, அந்த ஹோட்டலை…

Read more

“கொஞ்சம் சத்தம் போடுங்கப்பா!”…பிபிஎல் டாஸின் போது நடந்த தர்மசங்கடம்..ரமீஸ் ராஜாவை கண்டுக்காத ரசிகர்கள்…வைரல் வீடியோ!

கிரிக்கெட் மைதானத்தில் ரசிகர்களை உற்சாகப்படுத்துவது வர்ணனையாளர்களின் வழக்கம். ஆனால், வங்கதேச பிரீமியர் லீக் போட்டியின் போது ரமீஸ் ராஜாவுக்கு நேர்ந்த அனுபவம் அவரை ஒரு நிமிடம் ஆடிப்போக வைத்துள்ளது. போட்டியின் டாஸ் போடும் நிகழ்வின் போது, கேப்டன்களுடன் நின்றிருந்த ரமீஸ் ராஜா,…

Read more

“ரியல் சூப்பர் வுமன்!”.. ஆம்புலன்ஸ்காக கைக்குழந்தையுடன் களமிறங்கிய பெண் போலீஸ்…மெய்சிலிர்க்க வைக்கும் செயல்.. வைரலாகும் வியப்பான வீடியோ..!!

கடமை என்று வந்துவிட்டால் தாய்மை தடையாக இருக்காது என்பதை ஆந்திராவைச் சேர்ந்த ஒரு பெண் காவலர் நிரூபித்துக் காட்டியுள்ளார். ரங்கம்பேட்டை காவல் நிலையத்தில் பணியாற்றும் அந்தப் பெண் காவலர், விடுமுறையில் இருந்தபோது தனது குழந்தையுடன் காக்கிநாடா – சமர்லகோட்டா சாலையில் சென்றுகொண்டிருந்தார்.…

Read more

“அடச்சீ! பொது இடத்துல இப்படியா பண்ணுவாங்க!”.. மெட்ரோ நிலையத்தில் நடந்த அசிங்கமான கூத்து.. வைரலாகும் முகம் சுளிக்க வைக்கும் வீடியோ..!!!

டெல்லி மெட்ரோ ரயில்கள் எப்போதும் ஏதாவது ஒரு சர்ச்சைக்கு பெயர் போனவை. காதலர்களின் சில்மிஷம், ரீல்ஸ் மோகம் எனப் பல செய்திகளைப் பார்த்திருப்போம். ஆனால், தற்போது ஒரு நபர் செய்த காரியம் ஒட்டுமொத்த டெல்லிவாசிகளையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. டெல்லி மெட்ரோவின்…

Read more

“அப்ப திட்டுனீங்க.. இப்ப சிரிக்கிறீங்களா?”..41 பேர் செத்ததை வச்சு காமெடியா?..நடிகர் ஜீவாவின் காமெடியால் வெடித்தது புதுப் பிரச்சனை..!!!

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சோகமான சம்பவத்தை, தனது ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தில் காமெடியாகப் பயன்படுத்திய நடிகர் ஜீவா இப்போது சிக்கலில் மாட்டியுள்ளார். படத்தில் அமைச்சர் பேசிய வசனத்தைக் கிண்டல் செய்துள்ள ஜீவா, நிஜ வாழ்க்கையில் தான்…

Read more

“எவ்வளவு சொல்லியும் கேட்கல!”… செல்போன் காதலால் சொந்த அக்காவை ஓட ஓட விரட்டி கொடூரமாக கொன்ற தம்பி.. நெல்லையில் பகீர் சம்பவம்..!!!

திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் பகுதியில் செல்போன் பேச்சு விவகாரத்தில் ஒரு உயிர் பறிபோன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேவர்குளத்தைச் சேர்ந்த ராமராஜின் மகள் ராதிகா, அதே ஊரில் வசிக்கும் திருமணமான ஒரு உறவினருடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்ததாகக் கூறப்படுகிறது.…

Read more

“கல்யாணத்துக்குக் கூட கேரண்டி இல்ல! ஆனா இந்த டப்புக்கு உண்டு!”..கடைக்காரர் காட்டிய ‘அல்ட்ரா லெவல்’ கேரண்டி…வைரலான அசத்தல் வீடியோ!

பொதுவாகச் சாலை ஓரங்களில் விற்கப்படும் பிளாஸ்டிக் வாளிகள் மற்றும் டப்களுக்கு எந்த உத்தரவாதமும் இருக்காது. ஆனால், வைரலாகி வரும் இந்த வீடியோவில் ஒரு கடைக்காரர் தனது தயாரிப்பின் மீது வைத்துள்ள நம்பிக்கை அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. அந்த வீடியோவில், பிளாஸ்டிக் டப்…

Read more

“இது கிரிக்கெட்டா? இல்ல தெருச்சண்டையா?”…பாகிஸ்தான் வீரரைத் தாக்கிய இந்திய வீரர்?…ஏஐ செய்த வேலையா?..வைரல் வீடியோ..!!!

கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா – பாகிஸ்தான் மோதல் என்றாலே எப்போதுமே அனல் பறக்கும். ஆனால், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒரு கிரிக்கெட் போட்டியில் இந்திய பவுலர் வீசும் பந்தை அடித்துவிட்டு பாகிஸ்தான்…

Read more

“கஷ்டம் ஆயிரம் இருந்தாலும் கொண்டாட்டம் முக்கியம்!”..பாலிவுட் நடிகைகளையே மிஞ்சும் ஸ்டெப்ஸ்…பலூன் விற்கும் சிறுமியின் வைரல் டான்ஸ் வீடியோ..!!!

திறமை என்பது காசுக்கோ, வசதிக்கோ சொந்தமானது அல்ல என்பதற்கு இந்த சிறுமியே சாட்சி. சாலையில் பலூன் விற்று பிழைப்பு நடத்தும் அந்த சிறுமி, திடீரென ஒலித்த பாடலுக்கு ஆடிய நடனம் இப்போது நெட்டிசன்களை வாயடைக்க வைத்துள்ளது. இன்ஸ்டாகிராமில் வைரலாகும் அந்த வீடியோவில்,…

Read more

“நடந்து சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி!”.. காளை கொம்பால் தூக்கி வீசியதில் ரத்த வெள்ளம்..வீடியோ பார்த்தால் நெஞ்சு பதறும்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தின் பரபரப்பான மார்க்கெட் பகுதியில் இந்தத் திகில் சம்பவம் அரங்கேறியுள்ளது. ஒரு பெண் சாலையில் அமைதியாக நடந்து சென்று கொண்டிருந்தபோது, பின்னால் இருந்து ஓடிவந்த ஒரு பெரிய கருப்பு நிறக் காளை, யாரும் எதிர்பார்க்காத வகையில் அந்தப்…

Read more

“பாலிவுட் பஞ்சாயத்துக்கு எண்டு கார்டு!”..தவறாகப் புரிந்துகொண்டால் நான் என்ன செய்ய? பாலிவுட் விமர்சனங்களுக்கு அமைதியாகப் பதிலளித்த ஆஸ்கர் நாயகன்…!!

பாலிவுட் திரையுலகில் நிலவும் அதிகார மாற்றம் மற்றும் மதம் சார்ந்த பாகுபாடுகள் குறித்து ஏ.ஆர்.ரகுமான் பேசியது கடந்த சில நாட்களாக இந்திய அளவில் பேசுபொருளாகியுள்ளது. குறிப்பாக, நடிகை கங்கனா ரனாவத் உள்ளிட்டோர் ரகுமானுக்கு எதிராகக் காட்டமான கருத்துக்களைத் தெரிவித்து வந்த நிலையில்,…

Read more

“பந்தியே போடல.. அதுக்குள்ள எதுக்கு அவசரம்?”…எடப்பாடி காப்பி அடிக்கிறார்.. தினகரன் ஜோசியம் பார்க்கிறார்…அமைச்சர் ரகுபதியின் அனல் பறக்கும் பேட்டி..!!!

2026 சட்டசபை தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்புகளை “அவசரக் குடுக்கைத்தனம்” என அமைச்சர் ரகுபதி கிண்டல் செய்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திமுக கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை என்பதையும் திட்டவட்டமாகத் தெரிவித்தார். எடப்பாடி…

Read more

“கொடூரத்தின் உச்சம்!”.. தண்ணீரில் மூழ்கிய கார்… தந்தை கண்ணெதிரே மூழ்கிய மகன்.. நிர்வாகத்தின் அலட்சியத்தால் கொடூரம்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் கடும் மூடு  பனி ஒரு உயிரைப் பறித்துள்ளது. குருகிராமில் பணியாற்றி வந்த 27 வயது சாஃப்ட்வேர் இன்ஜினியர் யுவராஜ் மேத்தா, வெள்ளிக்கிழமை இரவு அலுவலகம் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். செக்டார் 150 அருகே வந்தபோது,…

Read more

“வெல்லம் உடம்புக்கு நல்லதுன்னு நினைச்சீங்களா? தயாரிக்கும் முறையைப் பார்த்தா ஷாக் ஆயிடுவீங்க!..வைரலாகும் அச்சுறுத்தும் வீடியோ…!!

சர்க்கரைக்கு மாற்றாக, உடலுக்கு ஆரோக்கியம் தரும் பொருளாக நாம் வெல்லத்தை (குடிசைத் தொழில் வெல்லம்) கருதுகிறோம். ஆனால், சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்று, வெல்லம் தயாரிக்கும் போது கடைப்பிடிக்கப்படும் அசுத்தமான முறைகளை அம்பலப்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், கரும்பை…

Read more

“சமைக்கும்போது ஏன்பா நிக்கணும்?”..வைரலாகும் பராத்தா மாஸ்டரின் வித்தை..பல கோடி பேரைக் கவர்ந்த எளிய கிச்சன் ஹேக் வீடியோ…!!!

கிச்சனுக்குள் நுழைந்தாலே கால்கள் வலிக்க மணிக்கணக்கில் நின்று கொண்டு சமைப்பது தான் பலரின் வழக்கமாக இருக்கிறது. ஆனால், “எல்லாவற்றிற்கும் ஒரு மாற்று வழி உண்டு” என்பதை ஒரு நபர் தனது வீடியோ மூலம் நிரூபித்துள்ளார். நின்றுகொண்டே பராத்தா சுடுவதற்குப் பதிலாக, அடுப்புக்கு…

Read more

“ஒரே நேரத்தில் 2 வாகனங்கள்!”…ஒரே நேரத்தில் 2 பிரேக்…விபத்தைத் தடுக்க டிரைவர் காட்டிய வித்தை…பதற வைக்கும் வீடியோ..!!

டிரைவிங் துறையில் ‘ஆல்ரவுண்டர்’ விருது என்று ஒன்று இருந்தால், அது நிச்சயம் இந்த நபருக்குத்தான் சேரும். ஒரு தொழிற்சாலைப் பகுதியில் சிமெண்ட் மூட்டைகளை லாரியில் ஏற்ற முயன்றபோது, எதிர்பாராத விதமாக லாரி முன்னால் நகரத் தொடங்கியது. அதே சமயம் சிமெண்ட் ஏற்றி…

Read more

“ஒரே மேடையில் தெரியப்போகும் கூட்டணி வடிவம்!”… ஜனவரி 23-ல் மோடி அதிரடி…NDA கூட்டணியின் மாஸ் பிளான்… நயினார் நாகேந்திரன் தகவல்..!!

தமிழக அரசியல் களம் 2026 தேர்தலை நோக்கி அனல் பறக்கத் தொடங்கிவிட்டது. இந்நிலையில், வரும் ஜனவரி 23-ஆம் தேதி மதுராந்தகத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாக பாஜக சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன்…

Read more

“தவெக பக்கம் யாரும் இல்லையா?”..மோடி வருகையில் முடியப்போகும் கூட்டணி கணக்கு…செங்கோட்டையன் கொடுத்த சீக்ரெட் அப்டேட்..!!

தமிழக அரசியல் களம் இப்போது 2026 சட்டசபை தேர்தலை நோக்கி படுவேகமாக நகரத் தொடங்கியுள்ளது. ஒருபுறம் “ஆட்சியில் பங்கு” எனத் தாராளம் காட்டி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கூட்டணிக்கு அழைப்பு விடுத்து வரும் நிலையில், இதுவரை எந்தவொரு…

Read more

“கோலி வழியில் கில்,தாகத்துக்கும் ஆபத்தா?”.. தண்ணீரை நம்பாத இந்திய வீரர்கள்… ஸ்பெஷல் மிஷினுடன் ஹோட்டலில் தங்கும் கேப்டன்..ஏன் இந்த முன்னெச்சரிக்கை?

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் போட்டி இந்தூரில் நடைபெறவுள்ள நிலையில், இந்திய அணியின் கவனம் தற்போது கிரிக்கெட்டைத் தாண்டி குடிநீர் பக்கம் திரும்பியுள்ளது. இந்தூரில் சமீபகாலமாக நிலவி வரும் மோசமான குடிநீர் மாசுப் பிரச்சனையைக் கண்டு இந்திய…

Read more

“அள்ளிக் கொடுக்கும் தமிழக அரசு!”…எழுத்தாளர்களுக்கு முதல்வர் கொடுத்த இன்ப அதிர்ச்சி…புத்தகக் கண்காட்சி நிறைவு விழாவில் மாஸ் அறிவிப்பு..!!!

சென்னையில் நடைபெற்று வரும் சர்வதேசப் புத்தகக் கண்காட்சியின் நிறைவு விழாவில், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழி எழுத்தாளர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் முக்கிய அறிவிப்பு ஒன்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் இன்று (ஜன.18) நடைபெற்ற பன்னாட்டுப் புத்தகக்…

Read more

“41 பேர் பலி.. விடாமல் துரத்தும் சிபிஐ!”.. தவெக வியூக வகுப்பாளருக்கு பறந்த சம்மன்…அதிருப்தியில் விஜய்…பின்னணி என்ன?

கரூர் கூட்ட நெரிசல் மரணங்கள் தொடர்பான வழக்கு இப்போது புதிய திருப்பத்தை எட்டியுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முக்கிய நிர்வாகிகளிடம் சிபிஐ ஏற்கனவே விசாரணை நடத்தியுள்ள நிலையில், தற்போது கட்சியின் தேர்தல் வியூக வகுப்பாளரான ஜான் ஆரோக்கியசாமிக்கு…

Read more

“மரண பயத்தைக் காட்டிய லாரி!”…சுங்கச்சாவடி ஊழியரைத் தூக்கி வீசிய விபத்து…ஓட்டுநரை வெளுத்து வாங்கிய மக்கள்…பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள செம்ரி (Semri) சுங்கச்சாவடியில் இன்று (ஜனவரி 18) காலை நெஞ்சை உறைய வைக்கும் விபத்து ஒன்று நடந்துள்ளது. சுங்கச்சாவடியில் கார்கள் வரிசையாக நின்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த ஒரு லாரி கட்டுப்பாட்டை இழந்து மின்னல் வேகத்தில்…

Read more

“அடிச்சிருவேன் ஓடிரு!”…வைரலாகும் இந்திய வீரர்களின் லூட்டி…ராஜஸ்தான் ராயல்ஸ் நண்பர்களின் ரகளையான வீடியோ..!!

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் துடிப்பான வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் துருவ் ஜூரல். இவர்கள் இருவரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகவும் இணைந்து விளையாடுவதால் மிக நெருக்கமான நண்பர்களாக வலம் வருகின்றனர். தற்போது நியூசிலாந்து தொடருக்காக இந்தூரில் தங்கியுள்ள இவர்கள், பயிற்சியை…

Read more

“காதலிச்சதுக்கு இப்படியா?”.. சிறுவனை நிர்வாணமாகி அலையவிட்டு அவலம்.. மனிதாபிமானமற்ற தாக்குதல்… பரபரப்பான சம்பவம்..!!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் மனிதாபிமானமற்ற ஒரு செயல் அரங்கேறியுள்ளது. தங்கள் வீட்டு சிறுமியுடன் காதலில் இருந்ததாகக் கூறி, ஒரு சிறுவனை அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் நிர்வாணமாக்கி நடுரோட்டில் இழுத்துச் சென்றுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக,…

Read more

“காசு கொடுத்ததுக்கு இதுதான் கதியா?”..ஏர் இந்தியாவின் விசித்திர இருக்கை..எக்ஸ்ட்ரா பணம் கொடுத்தும் ஏமாந்த பயணி..வைரலான வேதனை பதிவு..!!!

ஏர் இந்தியா விமானத்தின் சேவை குறித்துப் புகார்கள் எழுவது ஒன்றும் புதிதல்ல. ஆனால், இந்த முறை ஒரு பயணி தனது லண்டன் பயணத்தின் போது சந்தித்த அனுபவம் காண்போரையே முகம் சுளிக்க வைத்துள்ளது. ராகுல் ஸ்ரீவஸ்தவா என்ற பத்திரிகையாளர், லண்டன் செல்வதற்காக…

Read more

“பெத்த மகள்னுகூட பார்க்காம..!”..போதை தந்தையின் வெறிச்செயல்..15 நாள் மகளைக் கொன்ற கொடூரம் ..கதறும் தாய்..அதிர்ச்சி சம்பவ ,

பெற்ற மகளையே எமன் போல மாறிய தந்தை ஒருவரின் கொடூரச் செயல் அலிகார் மக்களை உலுக்கியுள்ளது. சிவில் லைன் பகுதியில் வசிக்கும் முக்ரிம் என்ற நபர், மது மற்றும் போதைக்கு அடிமையானவர். இவருக்கும் இவரது மனைவி ராணிக்கும் இடையே அடிக்கடி தகராறு…

Read more

“சத்தம் போடாதே!”..கார் டிரைவரை நடுங்க வைத்த ஸ்கூட்டர் நபர்…பட்டப்பகலில் நடந்த அராஜகம்..வைரல் வீடியோவால் அதிர்ச்சி..!!

இந்தியாவின் ஐடி தலைநகரான பெங்களூருவில் நாளுக்கு நாள் சாலை வன்முறை (Road Rage) சம்பவங்கள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி 16 அன்று, நெக்ஸஸ் சாந்திநிகேதன் மால் அருகே உள்ள சிக்னலில் ஒரு பயங்கரமான சம்பவம் அரங்கேறியுள்ளது.…

Read more

“சிங்கத்துக்கே ஆபத்தா?,யார் ராஜான்னு காட்டிய யானை!”..காட்டில் நடந்த அந்த அதிசயம்…சிலிர்க்க வைக்கும் வீடியோ!

காட்டில் சிங்கம் தான் ராஜா என்றாலும், சில நேரங்களில் கழுதைப்புலிகள் கூட்டமாகச் சேர்ந்து சிங்கத்தையே குறிவைக்கும். அப்படி ஒரு ஆபத்தான சூழலில், காயமடைந்த ஒரு சிங்கத்தை வேட்டையாட இரண்டு கழுதைப்புலிகள் பின்னாடியே சுற்றிக் கொண்டிருந்தன. ஆனால், அங்கே யாரும் எதிர்பார்க்காத ஒரு…

Read more

“டாய்லெட் கூட்டிட்டு போன கேப்!”..ரயில்நிலையத்தில் நடந்த பகீர் கடத்தல்..14 மணிநேரத்தில் குழந்தையை மீட்ட போலீஸ்..த்ரில்லர் பின்னணி…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா ரயில் நிலையத்தில் ஒரு தாய்க்கு ஏற்பட்ட கொடூர அனுபவம் அனைவரையும் அதிர வைத்துள்ளது. பிருந்தாவனத்தைச் சேர்ந்த ரேஷ்மா என்பவர், தனது 3 குழந்தைகளுடன் ஆக்ரா செல்வதற்காக ரயில் நிலையம் வந்துள்ளார். ரயிலுக்காகக் காத்திருந்தபோது, அவரது 3 வயது…

Read more

“பாகிஸ்தான் ரூட்ல வங்கதேசத்துக்கும் செக்!”..டாஸ் போட வந்த இடத்தில் இப்படியா?…வங்கதேச கேப்டனுக்கு ‘நோ’ சொன்ன இந்திய கேப்டன்…மைதானத்தில் பரபரப்பு…!!!

கிரிக்கெட் களத்தில் பரம எதிரிகளாகக் கருதப்படும் இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவும் அதே பதற்றம், இப்போது வங்கதேச அணியுடனும் வெடித்துள்ளதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இன்று புலவாயோவில் நடந்த வங்கதேசத்திற்கு எதிரான உலகக்கோப்பை போட்டியின் டாஸ் போடப்பட்டபோது, இரு அணி…

Read more

Other Story